- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் சேதுபதி பட இயக்குனரை கெட்டியாக பிடித்த நடிகர் தனுஷ்... அட சீக்கிரம் சூட்டிங் போக...

விஜய் சேதுபதி பட இயக்குனரை கெட்டியாக பிடித்த நடிகர் தனுஷ்… அட சீக்கிரம் சூட்டிங் போக சொல்லுங்கப்பா என்று உற்சாகத்துடன் கூறும் ரசிகர்கள்…

- Advertisement -

தமிழ் சினிமாவின் தற்போது பிசியாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் தனுஷ். நடப்பாண்டிலேயே அவர் இதுவரை இரண்டு திரைப்படங்களை கொடுத்து விட்டார். இதில் கேப்டன் மில்லர் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

 

- Advertisement -

இதே போல் சமீபத்தில் அவரது இயக்கத்தில் ராயல் திரைப்படம் வெளியானது. வசூலில் சக்கை போடு போட்ட இந்த திரைப்படம், 150 கோடி ரூபாய்க்கு மேல் குவித்தது. படம் வெற்றி பெற்றதால், தனுஷிற்கு இரண்டு காசோலைகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கியது.

 

- Advertisement -

ஆனால் அதில் எத்தனை ரூபாய் குறிப்பிடப்பட்டிருந்தது என்பது தெரியப்படுத்தவில்லை. இந்த நிலையில் தனுஷ் தற்போது, குபேரா படத்தின் இறுதி கட்ட சூட்டிங் இல் வேலை பார்த்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கும் இந்தத் திரைப்படத்தில், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

 

பிச்சைக்காரன் கோடீஸ்வரனாக மாறுவதை சஸ்பென்ஸ் கலந்த திரில்லராக இயக்குனர் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டன. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்கிறார் தனுஷ்.

 

ராக்கி, சாணி காகிதம், கேப்டன் பில்லர் படங்களை எடுத்த அருண் மாதேஸ்வரன் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதை தொடர்ந்து மாரி செல்வராஜ் படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார். இதனை சமீபத்தில் இயக்குனரே உறுதிப்படுத்தினார்.

 

இந்த சூழலில் மகாராஜா படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன், தனுஷிடம் ஒரு கதையை கூறியிருப்பதாக கூறப்படுகிறது. கதை மிகவும் பிடித்துப் போனதால் அதில் நடிக்க தனுஷ் சம்மதம் தெரிவித்து விட்டாராம். தற்போது நித்திலன் சுவாமிநாதன் நயன்தாராவை வைத்து மகாராணி என்னும் திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான பணிகளை முடித்துவிட்டு அவர் தனுசுடன் இணைவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்