- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நித்யாமேனன் நடிக்கிறார், படத்தின் பெயரை விரைவில் அறிவிப்போம் - அறிக்கை...

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நித்யாமேனன் நடிக்கிறார், படத்தின் பெயரை விரைவில் அறிவிப்போம் – அறிக்கை வெளியிட்டு உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்!

- Advertisement -

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த மலையாள நடிகை நித்யாமேனன், தமிழில் சில வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் மாலினி 22 பாளையங்கோட்டை, ஓ காதல் கண்மணி, மெர்சல், சைக்கோ, காஞ்சனா 2, இருமுகன், 24, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இதில் பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கின்றன. விஜய், உதயநிதி, ராகவா லாரன்ஸ், விக்ரம், சூர்யா, தனுஷ் ஆகியோர் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள நித்யா மேனன், அடுத்து உதயநிதி மனைவி கிருத்திகா டைரக்‌ஷனில் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை நித்யாமேனனுக்கு, கடந்த வாரத்தில் மத்திய அரசு, சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அறிவித்துள்ளது. இந்த விருதை மற்றொரு நடிகையுடன் நித்யாமேனன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

இப்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தியாகராஜன் தயாரிக்கும் புதிய படம் ஒன்றை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் பரோட்டா மாஸ்டர் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தில் நாயகியாக நடிக்க நடிகைகள் தேர்வு நடந்து வந்த நிலையில், இப்போது நித்யாமேனன் அந்த படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது.

- Advertisement -

இதுகுறித்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 1950களில் துவங்கப்பட்ட எங்களது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் எம்ஜிஆர் படங்களில் துவங்கி, இப்போது தனுஷ் படம் வரை பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ள பாரம்பரிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது, இப்போது விஜய் சேதுபதி நடிப்பில், பாண்டிராஜ் இயக்கும் புதுபடத்தை தயாரிக்கிறது.

கதைக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட இந்த படத்தில் நாயகியாக தேசிய விருது அறிவிக்கப்பட்ட நடிகை நித்யாமேனன் நடிக்கிறார். பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு, ஏற்கனவே துவங்கி பல இடங்களில் நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பில் நித்யாமேனன் பங்கேற்க இருக்கிறார். இந்த படத்தின் பெயர், இதர நடிகர், நடிகைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என, அதில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்