- Advertisement -
Homeபொழுதுபோக்கு35 படங்களை இயக்கிய வெற்றி இயக்குனர் சுந்தர் சி, ஒரு படத்தில் கூட அவர் பங்களிப்பு...

35 படங்களை இயக்கிய வெற்றி இயக்குனர் சுந்தர் சி, ஒரு படத்தில் கூட அவர் பங்களிப்பு இல்லையே? – தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் ஓர் உண்மை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் நிலைத்து நிற்க காரணம், அவர்கள் ரசிகர்களின் மனநிலை அறிந்து படங்களை தருவதுதான். மக்களுக்கு எப்போதுமே திகட்டாத விஷயமாக இருப்பது காதலும், காமெடியும்தான். தனது படங்களில் இந்த இரண்டு விஷயங்களை மட்டுமே அன்று முதல் இன்று வரை மையப்படுத்தி எடுத்து வரும் டைரக்டர் சுந்தர் சி, தொடர்ந்து வெற்றி இயக்குனராக பவனி வருகிறார்.

இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்த அவர், உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம், தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து முறைமாமன், மேட்டுக்குடி, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3, அரண்மனை 4 என 35 படங்களை இதுவரை இயக்கி இருக்கிறார் சுந்தர் சி.

- Advertisement -

இதுதவிர முரட்டுக்காளை, வீராப்பு, ஆயுதம் செய்வோம், குரு சிஷ்யன், தீ, பெருமாள், சண்ட உள்ளிட்ட பல படங்களில் சுந்தர் சி நடிக்கவும் செய்தார். சுந்தர் சி நடித்த படங்கள் பலவும் வெற்றி பெற்ற படங்களாக இருந்திருக்கின்றன. தவிர, சுந்தர் சி அவர் இயக்கிய அரண்மனை உள்ளிட்ட சில படங்களிலும் அவரே நடித்திருக்கிறார்.

குறிப்பாக இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து ஐந்து மாதங்களாக தமிழில் வெற்றிப் படங்களே வராத நிலையில், சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 4 படம்தான், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 100 கோடி ரூபாய் வரை வசூலில் சாதனை புரிந்தது. சுந்தர் சி, தமன்னா, ராஷிகண்ணா, டெல்லி கணேஷ், யோகிபாபு, கோவை சரளா, விடிவி கணேஷ், சேஷூ, ஜெயப்பிரகாஷ், சிங்கம்புலி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

- Advertisement -

கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சுந்தர் சி, இதுவரை 35 படங்கள் வரை இயக்கி உள்ளார். அவரது படங்கள் பெரும்பாலும் காதல் கதைகளாக, கிளாமர் நிறைந்த காட்சிகளுடன் இருக்கும். சுந்தர் சி படங்களின் பெரும்பாலான பாடல்களும் பெரும்பாலும் ஹிட் ஆகி விடுகின்றன. ஆனால் இதில் கவனிக்கத்தக்க முக்கிய விஷயம் ஒன்று உள்ளது.

அதாவது சுந்தர் சி இயக்கிய 35 படங்களில் ஒரு படத்துக்கு கூட இசைஞானி இளையராஜா இசையமைத்தது இல்லை. தன் படத்துக்கு இளையராஜா இசை வேண்டும் என்று ஒரு முறை கூட சுந்தர் சி விரும்பியதும் இல்லை, அவரை அணுகியதும் இல்லை. இளையராஜா இசை ஆதரவு இல்லாமல், தன் மீதும், தனது கதை மீதும் நம்பிக்கை வைத்து ஜெயித்தவர் இயக்குனர் சுந்தர் சி என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் அறியாத முக்கிய ஆச்சரிய தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்