விஜய் சேதுபதி தென்னிந்திய மொழி திரைப்படங்களில் மட்டுமல்லாது சமீப காலமாக பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் அவர் ஹிந்தியில் நடித்த “ஃபர்சி” என்ற வெப் சீரிஸ் வெளிவந்திருந்தது. அதில் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ஹிந்தியில் “மெர்ரி கிருஸ்துமஸ்”, “ஜவான்”, “மும்பைக்கர்” போன்ற திரைப்படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இதில் “மெர்ரி கிருஸ்துமஸ்” திரைப்படத்தில் கத்ரினா கெயிஃப், ராதிகா ஆப்தே ஆகியோருடன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இத்திரைப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் இந்த ஆண்டு கிருஸ்துமஸ் தினத்தை ஒட்டி வெளிவர உள்ளது.
இந்த நிலையில் சர்ச்சைக்கு பெயர் போன விமர்சகரான உமைர் சந்து என்பவர், தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு சர்ச்சைக்குரிய பதிவை பகிர்ந்து பரபரப்பை கிளப்பியுள்ளார். அதில், “மெர்ரி கிருஸ்துமஸ் திரைப்படத்தில் நடித்ததற்காக கத்ரீனா கெயிஃப் மகிழ்ச்சியாக இல்லை. தென்னிந்திய நடிகர் விஜய் சேதுபதி படப்பிடிப்பின்போது கத்ரீனா கெயிஃபிடம் பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றார்” என்று உமைர் சந்து குறிப்பிட்டுள்ளார். இந்த டிவிட் பாலிவுட் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதி கிசுகிசுக்களே பெரும்பாலும் இல்லாத ஒரு நடிகராகவே வலம் வருகிறார். சக நடிகர் நடிகைகளிடம் மிகவும் மரியாதையாக நடந்துகொள்பவர் விஜய் சேதுபதி என்று பலரும் கூறியுள்ளனர். ஆனால் உமைர் சந்துவின் டிவீட் பாலிவுட் ரசிர்களிடம் மட்டுமல்லாது தென்னிந்திய ரசிகர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் உமைர் சந்து எப்போதும் வீண் அவதூறுகளை பரப்பி வரும் வழக்கத்தையே கொண்டிருப்பவர் என்று பலரும் அவரை கண்டித்து வருகின்றனர்.
Breaking news 📰: #KatrinaKaif is not happy about her upcoming film #MerryChristmas. As per Close Crew from movie, South Actor #VijaySethupathi tried sexually harassed her during movie shooting. pic.twitter.com/qqL679NwRZ
— Umair Sandhu (@UmairSandu) July 19, 2023





