- Advertisement -
Homeபொழுதுபோக்குநேபாளம் சென்ற பிரபல நடிகையின் பெற்றோரை காணவில்லை, இதுவரை எந்த தகவலும் இல்லை - வருத்தப்படும்...

நேபாளம் சென்ற பிரபல நடிகையின் பெற்றோரை காணவில்லை, இதுவரை எந்த தகவலும் இல்லை – வருத்தப்படும் தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் பாதிப்புகளுக்கு மத்தியில், கைலாஷ் மலைக்கு யாத்திரை சென்றதாகக் கூறப்படும் நடிகை நிவேதா பெத்துராஜின் பெற்றோரை தொடர்புகொள்ள முடியவில்லை என்ற அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

நேபாளத்தில் உள்ள உயர்ந்த பனிமலை உடைந்து ஆற்றில் விழுந்த நிலையில் நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு நகருக்குள் பெருவாரியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் முக்கிய நகரங்கள் கட்டிடங்கள் பாலங்கள் குடியிருப்புகள் என பலவும் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது.

- Advertisement -

மேலும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய மக்களின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. கோவை ஈஷா மையத்தில் இருந்து சென்ற 77 பேர் கொண்ட யாத்திரீகர் குழுவை காணவில்லை. அவர்களை பற்றிய எந்த தகவலும் இல்லை என்று ஈஷா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், ஒரு நிகழ்ச்சியில் அறிவித்து கண்ணீர் விட்டு அழுததும் இணையத்தில் வைரலானது.

இப்போது நடிகை ஒருவரின் பெற்றோரும் நேபாளம் சென்ற நிலையில் அவர் காணாமல் போன அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் பல படங்களில் நடித்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். ஒரு நாள் கூத்து பொதுவாக எம்மனசு தங்கம் டிக்டிக்டிக் திமிரு புடிச்சவன் என பல படங்களில் அவர் நடித்திருக்கிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் அவர் சில படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் அவரது பெற்றோர் ரமேஷ் சர்மா (65) மற்றும் நீலம் சர்மா (64) ஆகிய இருவரையும் தொடர்புகொள்ள முடியவில்லை என நிவேதா பெத்துராஜ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனது பெற்றோர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாகத் தன்னை தொடர்புகொள்ளுமாறு மீட்புக் குழுவினர் மற்றும் அதிகாரிகளிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனதமிழகத்தில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்றவர்களில் சிலரை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்