- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்த மூன்று மாதம் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய சோதனை காலமாம்... அப்படி என்ன ஆகிப்போச்சுன்னு தெரியுமா?...

அடுத்த மூன்று மாதம் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய சோதனை காலமாம்… அப்படி என்ன ஆகிப்போச்சுன்னு தெரியுமா?…

- Advertisement -

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர், அருண் விஜயின் மிசன் சாப்டர் ஒன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இதில், அருண் விஜய் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. அயலான் கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலை குவிக்க தவறவில்லை.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாகின. இதில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வெளியானது. வழக்கம்போல காமெடி ஜானலில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

- Advertisement -

பிறகு கடந்த வாரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. ஆனால் விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் பெரிய அளவில் கவரவில்லை. இதனால் ரஜினி படத்திற்கே உண்டான வசூல் இந்த படத்தில் அடையவில்லை. இதேபோல் வெளியான லவ்வர் திரைப்படமும் போதுமான விமர்சனத்தை பெறவில்லை.

இப்படியான சூழலில், வரும் 16ஆம் தேதி ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள சைரன் திரைப்படம் வெளியாகிறது. இதில் கதாநாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு பிறகு அடுத்த மூன்று மாதங்களுக்கு முக்கிய திரைப்படங்கள் எதுவுமே வெளியாகாது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

தங்கலான், கங்குவா, வேட்டையன் உள்ளிட்ட திரைப்படங்கள் மே அல்லது ஜூன் மாதமே ரிலீஸ் செய்யப்படும் என கூறப்படுகிறது. அதைப்போல் தமிழ் புத்தாண்டிற்கும், எந்த திரைப்படங்களும் வெளியாக வாய்ப்பில்லை என்று தெரிகிறது. மக்களவைத் தேர்தல் வேறு நெருங்கும் சூழலில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்குப் பிறகு பணத்தை வெளியிட தயாரிப்பாளர்களும் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் மாதமும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இருப்பதால், திரையரங்குகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த மூன்று மாதங்களில் திரையரங்குகளில் சொற்ப வருமானமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் மின்சாரத்தை சிக்கனப்படுத்த முடிவெடுத்துள்ள திரையரங்கு உரிமையாளர்கள், பல காட்சிகளை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளனர். பால்கனி காட்சிகளும் இருக்காது என்று கூறப்படுகிறது. இதனால் அடுத்த மூன்று மாதங்களுக்கு, தமிழ் சினிமாவில் வணிகம் என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று சினிமா விமர்சனகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்