- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்க மகனுக்கு நல்ல அரசியல் கத்துக் கொடுங்க, அவரை காப்பாற்ற தப்பான அரசியலை காட்டாதீங்க -...

உங்க மகனுக்கு நல்ல அரசியல் கத்துக் கொடுங்க, அவரை காப்பாற்ற தப்பான அரசியலை காட்டாதீங்க – விஜய் அப்பாவை விமர்சித்த இயக்குனர் சேரன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1980ம் ஆண்டுகளில் புரட்சி இயக்குனர் என்று ரசிகர்களால் பெயர் பெற்றவர் எஸ்ஏ சந்திரசேகர். அவர் தனது மகன் விஜயை நாளைய தீர்ப்பு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். பல ஆண்டுகள் சரியாக திட்டமிட்டு பாடுபட்டு தனது மகன் விஜயை முன்னணி நடிகர்களில் ஒருவராக எஸ் ஏ சந்திரசேகர் உருவாக்கினார்.

பூவே உனக்காக துள்ளாத மனமும் துள்ளும் காதலுக்கு மரியாதை பிரண்ட்ஸ் திருமலை சிவகாசி திருப்பாச்சி போன்ற படங்களின் பிளாக்பஸ்டர் வெற்றியால் விஜய் முன்னணி நட்சத்திர நடிகராகி மாறினார். அவரது ரசிகர்களின் கூட்டமும் பெருகியது. இந்த சூழலில் நடிகர் விஜயின் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி விஜயை அரசியலை நோக்கி இழுத்து வந்தது அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் தான்.

- Advertisement -

முதன்முதலில் விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் ஒரு அரசியல் கட்சியையும் அவர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இப்போது தவெக தலைவராக உள்ள விஜய்க்கு ஆதரவாக எஸ்ஏ சந்திரசேகர் பேசி வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற எஸ்ஏ சந்திரசேகர் விஜய்க்கு ஆதரவாக பல விஷயங்களை பேசியிருந்தார்.

இதுகுறித்து இயக்குனர் சேரன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, சட்டம் ஒரு இருட்டறை நீதிக்கு தண்டனை நான் சிவப்பு மனிதன் போன்ற அரசியல் விழிப்புணர்வு படங்களை மக்களுக்கு தந்த எஸ்ஏ சந்திரசேகர் இப்போது தனது பிள்ளையை காப்பாற்ற களத்தில் திடீரென பேட்டிகள் தருகிறார். பெரும் அரசியல் பார்வை உள்ள ஒரு மனிதர் தனது மகனின் அரசியலில் தெளிவும் உழைப்பும் தொலைநோக்கு சிந்தனையும் இல்லை எனத் தெரிந்தும் அவரை அரசியலில் உயர்த்த நினைப்பது தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுப்பது போன்றதாகும்.

- Advertisement -

அடுத்த தலைமுறை இளைஞர்களை அவர்களுக்கான அரசியல் புரிதலை உள்வாங்கி கற்றுக் கொடுக்காமல், வெறும் கூட்டம் காண்பிக்க பயன்படுத்தி பலனடைய நினைப்பது சரியா? இதைப் பற்றி யோசிக்காமல் தனது பிள்ளை என்பதால் இவரை போன்ற பெரும் முதிர்ச்சியானவர்கள் விஜயை காப்பாற்ற அரசியலில் ஊக்கமளித்து செயல்படுவது வருத்தம் அளிக்கிறது. கற்றுக் கொடுங்கள் முதலில். தயாராக்குங்கள் அவரையும் அவர் ரசிகர்களையும். பின்னர் எல்லோருக்கும் நாம் தேவையா என்பதை அவரே முடிவு செய்வார்.

இந்த சமூகத்துக்கு எந்த தீங்கும் விளைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் இந்த பதிவு. அடுத்த தலைமுறையை ஆபத்தான இடத்துக்கு அழைத்து செல்கிறார்கள் இவர்கள். எஸ்ஏசி ஐயாவுக்கு அவரின் பிள்ளை முக்கியம் எனில் நமக்கு நம் பிள்ளைகள் முக்கியம். சிந்தியுங்கள் மக்களே… என்று இயக்குனர் சேரன் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்