தமிழ் சினிமாவில் கடந்த 30 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹீரோக்கள் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருப்பார்கள். படங்களின் வெற்றி தோல்வி சம்பளம் குறித்தெல்லாம் பெரிதாக கவலைப்படாமல் மக்களுக்கான பொழுதுபோக்கு படங்களை தருவதில் மட்டுமே குறியாக இருந்தனர். அதனால் ஏராளமான படங்கள் தமிழில் வெளியாகின.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிக அதிகமான படங்களில் நடித்த நடிகர்களின் விபரம் அறிந்துக்கொள்ளலாம். அதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் சத்யராஜ் இதுவரை 240க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் ஹீரோவாக நடித்தது மிக குறைவுதான். வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த படங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
தனது 5 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் கமல்ஹாசன், தனது 60 ஆண்டுகால சினிமா பயணத்தில் அடுத்ததாக கமல் நடிக்கும் படம் அவரது 237வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பிரபு இதுவரை 220 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவரும் கடந்த பல ஆண்டுகளாகவே குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
மூத்த நடிகர் ஜெமினி கணேசன் 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் 170 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். தற்போது அவர் நடித்துவரும் படம் 173வது படம் தர்மன் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 25 ஆண்டுகளில் ரஜினி நடித்த படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு படம் என்று அவர் நடித்ததும் இதற்கு முக்கிய காரணம்.
அதேபோல் நடிகர் சரத்குமார் தற்போது தனது 150வது படத்தில் நடித்து வருகிறார். மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் 150 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். மறைந்த நடிகர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 150 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அவர் 1977 முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு தமிழக முதல்வர் ஆனதால் அதிக படங்களில் நடிக்க முடியவில்லை. எனினும் குறுகிய காலத்தில் நிறைய படங்களில் அன்றைய நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.
ஆனால் இன்றைய இளம் நடிகர்களின் 50 மடங்களுக்கு மேல் நடித்தவர்கள் மிக குறைவுதான். நடிகர் விஜய் சேதுபதி நடித்த 50வது படம் மகாராஜா. நடிகர் தனுஷ் நடித்த 50வது படம் ராயன். நடிகர் சியான் விக்ரம் 60 படங்களிலும் அஜீத்குமார் 62 படங்களிலும் நடிகர் விஜய் 69 படங்களில் நடித்திருக்கிறார்கள். நடிகர்கள் சூர்யா சிலம்பரசன் ஆர்யா ஆர் மாதவன் ஜெயம் ரவி கார்த்தி போன்றவர்கள் நடித்த படங்களின் எண்ணிக்கை இன்னும் 50 கூட எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





