தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வரவேற்பை பெற்றவர் வெற்றிமாறன். பொல்லாதவன் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ஆடுகளம் அசுரன் வடசென்னை விசாரணை விடுதலை போன்ற படங்களை இயக்கியவர். இவர் இயக்கிய அனைத்து படங்களுமே வெற்றிப் படங்களாக இருந்தன.
இவரது இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில், காட்டுக்குள் தப்பிப்போன தனுஷ், கென்னியை பிடிக்க நாய்களுடன் ஒரு வில்லன் கூட்டம் வரும். அந்த வில்லன் கூட்டத்துக்கு தலைவராக இருப்பவர்தான் நடிகர் தமிழ். மேலும் தமிழ், விக்ரம்பிரபு நடித்த டாணாக்காரன் என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி சூர்யா மணிகண்டன் நடித்த ஜெய்பீம் படத்தில் போலீஸ் அதிகாரியாக தமிழ் நடித்திருப்பார். விசாரணை என்ற பெயரில், லாக்கப்புக்குள் மணிகண்டனை அடித்து துன்புறுத்தி கொலை செய்யும் கொடூரமான போலீஸ் அதிகாரியாகவும் தமிழ் நடித்திருப்பார்.
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்திலும் போலீஸ் அதிகாரியாக சில காட்சிகளில் தமிழ் நடித்திருக்கிறார். தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் படங்களில் அவருக்கு உதவியாளராகவும், அவரது படங்களில் நடித்தும் வருகிறார் தமிழ் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில நேர்காணல் ஒன்றில் அவர் கூறியதாவது, பொல்லாதவன் படத்தை நானும் என் நண்பனும் பார்த்தோம். படம் பார்த்துட்டு வரும்போது என்கிட்ட அந்த நண்பன், இந்த படத்தை எடுத்தவன் கண்டிப்பா ஒரு கிரிமினலா தான் இருப்பான்டா என்று சொன்னான். ஏண்டா அப்படி சொல்றே என்று கேட்டதற்கு இவ்வளவு நுணுக்கமா எப்படீடா ஒரு படத்தை பண்ண முடியும்.
கண்டிப்பா அதை சார்ந்த ஒரு ஆளாக தான் இவன் இருப்பான் என்று சொன்னான். இதை நான் வெற்றி அண்ணன்கிட்டேயும் சொல்லி இருக்கிறேன். அப்போது நான் சினிமாவுக்குள் வருவேன், வெற்றி அண்ணனுடன் இணைந்து வேலை செய்வேன் என்றெல்லாம் நினைத்து கூட பார்த்தது இல்லை என்று நடிகர் தமிழ் கூறியிருக்கிறார். இப்படி சொன்னதால்தான் தமிழை கூடவே வெற்றிமாறன் வெச்சுக்கிட்டாரா என ரசிகர்கள் கலாய்க்கின்றனர்.





