- Advertisement -
Homeபொழுதுபோக்குகுகைக்குள்ளே விழுந்தவருக்கு நாங்கள் இப்படித்தான் மேக்கப் போட்டோம்... மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்திலிருந்து வெளிவராத புதிய தகவல்...

குகைக்குள்ளே விழுந்தவருக்கு நாங்கள் இப்படித்தான் மேக்கப் போட்டோம்… மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்திலிருந்து வெளிவராத புதிய தகவல்…

- Advertisement -

மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸ். கேரளாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் இந்த திரைப்படம் சக்கை போடு போட்டது. இதற்கு முக்கிய காரணம், படத்தின் பெரும்பாலான காட்சிகள் கொடைக்கானலில் எடுக்கப்பட்டதும், தமிழ் ரசிகர்களுக்கு புரியும்படி இந்த திரைப்படம் இருந்ததுதான்.

 

- Advertisement -

உண்மை கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. அதாவது கேரள மாநிலம் கொச்சிக்கு அருகே உள்ள மஞ்சுமல் பகுதியிலிருந்து, கொடைக்கானலுக்கு இளைஞர்கள் சுற்றுலா செல்கிறார்கள். அப்போது, குணா குகைக்குள் அவர்கள் தடையை மீறி செல்ல அதில் இருக்கும் ஒரு குழிக்குள் இளைஞர் தவறி விடுகிறார்.

 

- Advertisement -

ஏற்கனவே அந்த குழிக்குள் விழுந்தவர்கள் யாரும் உயிர் திரும்பாத சூழலில், அந்த இளைஞரை அவரது நண்பர் ஒருவர் காப்பாற்றி இருக்கிறார். இதனை மையமாக வைத்தே மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டது. இதனை சிதம்பரம் என்பவர் இயக்கி இருந்தார்.

 

தீவிர கமல்ஹாசன் ரசிகரான அவர், படத்தில் குணா குறித்த காட்சிகளையும், கண்மணி அன்போடு பாடலையும் சரியான நேரத்தில் காட்டியிருந்தார். அது மட்டுமில்லாமல் படத்தில், குழிக்குள் விழும் நபராக ஸ்ரீநாத் பாசி நடித்திருந்தார். அவர் திடீரென அந்த இடத்தில் முழுவதும், அடுக்கடுக்கான பாறைகளில் இருந்து அவர் காயப்படும் காட்சியும் காண்போரை உறைய வைக்கும் வகையில் இருந்தது.

 

படத்தின் இரண்டாம் பாதி முழுக்க, அந்த இளைஞரை எப்படி காப்பாற்ற போகிறார்கள் என்ற பதை பதைப்பு திரையரங்கில் இருந்த ஒவ்வொருவருக்கும் இருந்தது. இந்த நிலையில், குழிக்குள் விழுந்த ஸ்ரீநாத் பாசியின் தோற்றத்திற்கான மேக்கப் குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

 

அதாவது ஸ்ரீநாத் பாசிக்கு சேற்றைப் பூசி இருப்பதாகத்தான் பலரும் நம்பி இருந்தார்கள். ஆனால் அவரது முகம் மற்றும் உடம்பில், ஓரியோ பிஸ்கட்டை நன்றாக அரைத்து மேக்கப் போட்டிருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. எந்தவித உறுத்தலும் இல்லாமல் அந்த காட்சி அமைவதற்கு, இந்த மேக்கப் கை கொடுத்ததாக படக்குழுவினர் கூறுகிறார்கள். அதேசமயம் பிஸ்கட்டை அள்ளிப் பூசியதால், நடிகர் ஸ்ரீநாத் பாசி எறும்பு கடிக்கு ஆளானதாகவும், அதைத் தாங்கிக் கொண்டுதான் இந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்ததாகவும் சினிமா விமர்சகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்