- Advertisement -
Homeபொழுதுபோக்குவேட்டுவம் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து… உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் - இயக்குனர் பா ரஞ்சித் என்ன...

வேட்டுவம் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து… உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் – இயக்குனர் பா ரஞ்சித் என்ன சொல்லி இருக்கிறார்ன்னு பாருங்க!

- Advertisement -

அட்டக்கத்தி மெட்ராஸ் கபாலி காலா தங்கலான் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் இயக்குனர் பா ரஞ்சித் இப்போது வேட்டுவம் என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நாகப்பட்டணம் பகுதியில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. கடந்த 13ம் தேதி கார் சண்டைக்காட்சி படப்பிடிப்பு நடந்தபோது ஏற்பட்ட விபத்தில் ஸ்டன்ட் மாஸ்டர் மோகன்ராஜ் என்பவர் உயிரிழந்தார்.

படப்பிடிப்பு தளத்தில் அலட்சியமாக செயல்பட்டது, கவனக்குறைவாக இருந்தது என்கிற புகார் அடிப்படையில் இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் ராஜ்கமல் வினோத் பிரபாகரன் ஆகிய 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 52 வயதான ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு பெரிய சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து இயக்குனர் பா ரஞ்சித் எந்தவிதமான வருத்தமும் தெரிவிக்காமல் இருந்தார்.

- Advertisement -

இப்போது தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இயக்குனர் பா ரஞ்சித் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, கடந்த 13ம் தேதி காலை நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்து வந்த வேட்டுவம் படப்பிடிப்பில் திறமையான சண்டை கலைஞரும் எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான மோகன்ராஜை நாங்கள் எதிர்பாராத விதத்தில் இழந்தோம். அவரின் மனைவி குழந்தைகள் குடும்பம் மற்றும் சக பணியாளராக நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது.

எப்போதும் போலவே கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு செய்யும் தெளிவான திட்டமிடல் பாதுகாப்பு ஏற்பாடுகள் எங்களை வேண்டுதல்கள் வாழ்த்துக்கள் என எல்லாம் இருந்தன. சண்டைக்காட்சிகளை திட்டமிடுவதில் செயல்படுத்துவதில் தெளிவும் நேர்த்தியும் கொண்டு இருந்த நிகரற்ற கலைஞரான அவருடைய வழிகாட்டுதலையும், எங்கள் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் மாஸ்டரின் விளக்கமான திட்டமிடலையும் பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் பெரிதும் மதித்தோம். தவறாமல் பின்பற்றினோம்.

- Advertisement -

ஆனால் அந்த நாள் அண்ணன் மோகன்ராஜின் உயிரிழப்பில் முடிந்தது என்பது தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மோகன்ராஜ் அண்ணன் தனது ஸ்டண்ட் டீம் எங்களது குழு என அனைவரின் மரியாதையையும் அன்பையும் பெற்றவர். செழுமையான அனுபவமும் சாதனைகளும் கொண்டு தன் நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை சக ஸ்டண்ட் வீரர்களை இயக்குனர்களை பெருமைப்படுத்திய கலைஞர்.

அவர் எங்கள் ஒவ்வொருவரின் மரியாதையும் அன்பும் வந்தனங்களும் என்றென்றும் அவருக்கு சமர்ப்பணம். இது எங்கள் அனைவரையும் உலுக்கி இருக்கும் பேரிழப்பு. ஒரு கணவராக தந்தையாக பிரமாதமான சண்டை கலைஞராக நேர்த்தியான மனிதராக வாழ்ந்த மோகன்ராஜ் அண்ணாவின் இறப்புக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். ஆகச்சிறந்த ஸ்டண்டு கலைஞராய் அறியப்பட விரும்பிய அவரை என்றும் அப்படியே நாங்கள் நினைவில் வைத்து போற்றுவோம் என்று அதில் இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்