- Advertisement -
Homeபொழுதுபோக்குதீ பரவட்டும்... வந்தாச்சு பராசக்தி திரைப்படத்தின் ரிலீஸுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு... விஜயுடன் மோதினாலும் அதிலும் ஒரு...

தீ பரவட்டும்… வந்தாச்சு பராசக்தி திரைப்படத்தின் ரிலீஸுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு… விஜயுடன் மோதினாலும் அதிலும் ஒரு ட்விஸ்ட் வச்சிருக்காங்க…

- Advertisement -

இறுதிச்சுற்று, சூரரைப் போற்று என இரண்டு அட்டகாசமான திரைப்படங்களை கொடுத்தவர் சுதா கொங்கரா. அவருக்கு முதல் திரைப்படமாக அமைந்தது துரோகி. ஆனால் அது அந்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. பிறகு இறுதிச்சுற்று திரைப்படத்தை இயக்கினார் சுதா. குத்துச்சண்டை விளையாட்டு மற்றும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதனைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கொடுத்தார். சொந்தமாக விமான நிறுவனம் தொடங்க வேண்டும் எனும் கோபிநாத் என்பவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், மிகப்பெரிய அளவில் ரிச் ஆனது. திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த திரைப்படம் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் அடுத்ததாகவும் சூர்யாவுடன் இணைய போவதாக அறிவித்தார் சுதா கொங்கரா. படத்திற்கு புறநானூறு என டைட்டில் வைக்கப்பட்ட நிலையில், சூர்யாவின் 2டி என்டர்டைன் நிறுவனம் இதனை தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. நஸ்ரியா நசீம் விஜய் வர்மா துல்கர் சல்மான் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

அதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்தமாக திட்டத்தை மாற்றினார் சுதா. சூர்யாவுக்காக எழுதிய கதை சிவகார்த்திகேயனுக்கு சென்றது. அது எஸ்கேவின் 25வது திரைப்படமாக உருவாக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இந்த திரைப்படத்தை தயாரித்தார்.

- Advertisement -

புறநானூறுக்கு பதில் பராசக்தி என படத்திற்கு பெயர் வைத்தார்கள். இதில் தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா, அதர்வா, மிக முக்கியமாக வில்லன் கதாபாத்திரத்தில் ரவி மோகன் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. சென்னையில் இதன் சூட்டிங் தொடங்கப்பட்ட நிலையில், காரைக்குடி, இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கினார்கள். 1960களில் நடப்பது போன்று இந்த திரைப்படம் காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது. கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.

இதன் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் தெலுங்கு நடிகர் ராணா இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஜிவி பிரகாசுக்கு நூறாவது திரைப்படமாக இது அமைகிறது. இந்த நிலையில் பராசக்தி திரைப்படம் அடுத்த ஆண்டு, பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ஜனவரி ஒன்பதாம் தேதி விஜயின் ஜனநாயகன் படம் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு, பராசக்தி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்