- Advertisement -
Homeபொழுதுபோக்குதியேட்டரில் ரூ. 100 கோடி வசூலை அள்ளிய நடிகர் சிவகார்த்திகேயன் - விரைவில் ஓடிடி தளத்துக்கு...

தியேட்டரில் ரூ. 100 கோடி வசூலை அள்ளிய நடிகர் சிவகார்த்திகேயன் – விரைவில் ஓடிடி தளத்துக்கு வரும் பராசக்தி படம் – தேதி குறிச்சாச்சு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். நடிகர் விஜய் அரசியல் களத்துக்கு சென்று விட்டதால் இனி அவரது இடத்தை பிடிக்கப் போது நடிகர் சிவகார்த்திகேயன்தான் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் விஜய் போல எஸ்கே ஆகவே முடியாது என்றும் ஒரு தரப்பினர் பேசி வருகின்றனர்.

ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரை 25 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். சினிமாவுக்குள் அவர் வந்து 14 ஆண்டுகளே ஆன நிலையில் அவரது அபரிமிதமான வளர்ச்சி என்பது கவனிக்கத்தக்கது. விடாமுயற்சி கடின உழைப்பு கதைகளை தேர்வு செய்யும் விதம் போன்ற காரணங்களால் அவரது படங்கள் தொடர்ந்து ஜெயிக்கின்றன.

- Advertisement -

இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் கேடி பில்லா கில்லாடி ரங்கா வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் எதிர்நீச்சல் டான் மான் கராத்தே மனம்கொத்திப் பறவை ரெமோ டாக்டர் மாவீரன் போன்ற படங்கள் அவருக்கு நல்ல ஒரு வரவேற்பை வெற்றியை பெற்றுத் தந்தன. அதே நேரத்தில் அயலான் ஹீரோ போன்ற சில படங்கள் பலத்த தோல்வியை தந்தன.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 25வது படம் பராசக்தி. கடந்த மாதம் 10ம் தேதி பராசக்தி பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஸ்ரீலீலா நாயகியாக நடித்திருந்தார். மேலும் அதர்வா ரவிமோகன் குருசோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

- Advertisement -

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் ரூ. 100 கோடி வசூலித்த படமாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட களத்தில் உருவான இந்த படத்தில் அழுத்தமான காட்சிகளும் திரைக்கதையும் இல்லை என்கிற விமர்சனம் எழுந்தது. இந்த படத்தின் தோல்விக்கு விஜய் ரசிகர்கள் காரணம் என்று இயக்குனர் பழி சுமத்தி பிறகு பின்வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பராசக்தி படம் மிக விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் வெளியாக உள்ளது, வருகிற 7ம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் பராசக்தி படம் ரிலீஸாகிறது என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் சரியாக ஓடாத போதிய வரவேற்பை பெறாத இந்த படம் ஓடிடி தளத்தில் 4 வாரங்களுக்கு பிறகு ரிலீஸ் ஆகிறது. ஓடிடி தளத்தில் ரசிகர்களின் வரவேற்பை ஆதரவை பெறுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- Advertisement -

சற்று முன்