- Advertisement -
Homeபொழுதுபோக்குபடக்குழு போட்ட அதிரடி பிளான் - திடீரென பிரிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் பாரசக்தி ஷெட் -...

படக்குழு போட்ட அதிரடி பிளான் – திடீரென பிரிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் பாரசக்தி ஷெட் – போடு வெடிய, அந்த ஊர் மக்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பா?

- Advertisement -

மொழிப்போர் தியாகி ராஜேந்திரனின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையில் பராசக்தி படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி இருக்கிறார். இது கடந்த 1960 -65ம் ஆண்டுகளில் இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு பற்றிய கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் நாயகனாகவும் அதர்வா ரவிமோகன் பசில் ஜோசப் குரு சோமசுந்தரம் ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த படம் முதலில் புறநானூறு என்ற டைட்டிலில் உருவாக இருந்தது. நாயகனாக நடிகர் சூர்யா நடிக்க கமிட் ஆனார். அவரது 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கவும் முன்வந்தார். பிறகு படத்தின் கதையில் அவருக்கு முரண்பாடு ஏற்பட்டதால் படத்தில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதன்பிறகு இந்த கதையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்தார். இந்த படம் வருகிற ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனநாயகன் படமும் பராசக்தி படமும் அடுத்தடுத்து வெளியாவதால் இதில் எந்த படத்துக்கு ரசிகர்களின் அமோக ஆதரவு கிடைக்கும் என்பதில் பெரிய பரபரப்பு கோலிவுட்டில் நிலவுகிறது.

இதற்கிடையே இந்த படத்தின் பிரமோசனுக்காக பராசக்தி படத்தின் கண்காட்சி ஷெட் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வோர்ல்டு ஆப் பராசக்தி என்ற தலைப்பில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நடந்து வந்தது. இதில் 1960 – 65ம் ஆண்டு காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் வாழ்க்கை முறை, அப்பேஆது மக்கள் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவை இந்த கண்காட்சியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

- Advertisement -

சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள், சினிமா ரசிகர்கள் இந்த கண்காட்சிக்கு நேரில் வந்து பார்வையிட்டு மகிழ்ந்தனர். இது பராசக்தி படத்துக்கு பெரிய விளம்பரமாகவும் அமைந்தது. இந்நிலையில் அந்த பராசக்தி கண்காட்சி ஷெட் முழுவதும் இப்போது பிரிக்கப்பட்டு விட்டது. அங்கு கண்காட்சி நிறைவடைந்ததாகவும் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

வள்ளுவர் கோட்டத்தில் அமைத்த ஷெட்டை அப்படியே கோவையில் கண்காட்சி திரும்ப அமைத்து அங்குள்ள பொதுமக்கள் பார்வைக்கு வைக்க உள்ளனர். அதே போன்று இதே போல இன்னொரு பராசக்தி ஷெட்டை கூடுதலாக உருவாக்கி மதுரையிலும் கண்காட்சி அமைக்க உள்ளதாகவும் படக்குழு தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். அதனால் வரும் நாட்களில் கோவை மற்றும் மதுரையிலும் பராசக்தி படத்தின் கண்காட்சியை மக்கள் நேரில் கண்டு மகிழலாம்.

- Advertisement -

சற்று முன்