நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் நேற்று மாலை வெளியானது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக, இந்த பாடலை விஜய் படத்தை தயாரித்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பட தயாரிப்பு நிறுவனம், கோட் படக் குழுவினர் இந்த பாடலை நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டனர்.
இந்த பாடல் காட்சியில், நடிகர்கள் விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் 50 பேருக்கு மேல் கூட்டமாக ஆடுகின்றனர். நட்சத்திர ஓட்டலில் டாஸ்மார்க் பார் போன்ற ஒரு இடத்தில் இந்த பாடல் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. பாடலின் ஆரம்பம் முதல் இறுதி வரை, கும்பலாக விஜய், பிரசாந்த், பிரபுதேவா குத்தாட்டம் போடும் வகையில் இந்த பாடல் காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது.
விசில் போடு என்று ஆரம்பிக்கும் இந்த பாடலில் பார்ட்டி தொடங்குகிறேன், என் பார்ட்டியில் நீ இருக்கணும், ஷாம்பெயின் பாட்டில் திறக்கட்டுமா என்ற வரிகளைக் கொண்டு இந்த பாடல் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து தனது 69வது படத்தில் மட்டுமே நடிக்கும் விஜய், அடுத்ததாக தமிழக சட்டசபை தேர்தலை குறிவைத்து தமிழக அரசியல் களத்தில் தீவிரமாக பணியாற்ற திட்டமிட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில், கோட் படத்தில் அரசியல் சம்பந்தமான காட்சிகளோ, அரசியல் குறித்த வசனங்களோ, அரசியல் சம்பந்தமான எந்த விஷயங்களும் இல்லை என்று கூறப்பட்ட நிலையில், இந்த பாடல் காட்சியில் முழுக்க முழுக்க விஜய் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு, அரசியல் களத்தில் தொண்டர்கள் பாடுவதைப் போன்ற அமைப்பில் இந்த காட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த பாடலை கவிஞர் மதன் கார்க்கி எழுதி இருக்கிறார்.
ஒரு தரப்பு ரசிகர்கள் நடிகர் விஜய் மீதுள்ள ஆர்வத்தில், அபிமானத்தில் இந்த பாடலை பாராட்டினாலும், பொதுவான சினிமா ரசிகர்கள் இது என்ன பாட்டு, இது என்ன நடனம், இது நல்லாவா இருக்கு என்று தான் கேள்வி எழுப்பி வருகின்றனர். முதல் பாடலே சொதப்பலாக, எதிர்பார்ப்பை நொறுக்கி விட்டதால் இனி படம் லியோ மாதிரியே இருக்குமோ என்று பொதுவான சினிமா ரசிகர்கள் சிரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பாடல் குறித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், அருமையான வஜனங்கள் என்று குறிப்பிட்டு கிண்டலடித்துள்ளார். அவர் குறிப்பிடுவது போல், அந்த பாடல் முழுக்க வசனங்களாக தான் இருக்கின்றன. பாடல், நடனம் எதுவுமே நன்றாக இல்லை என்பது தான் உண்மை. அதனால் அவரது கருத்துக்கு பெரும்பாலான ரசிகர்கள் அது உண்மைதான் என்பது போல, கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்





