தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பாண்டிராஜ். பசங்க மெரினா வம்சம் நம்ம வீட்டுப்பிள்ளை கடைக்குட்டி சிங்கம் என பல ஹிட் படங்களை தந்திருக்கிறார். சமீபத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான படம் பரிமளா அண்ட் கோ. இந்த படத்தில் நடிகர் ஜெயராம் நடிகை ஊர்வசி மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மிஷ்கின் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் கதை என்னவென்றால் ஒரு சமூக விரோத குற்றவாளி மர்ம நபர்களால் கொல்லப்படுகிறான். அவனை கொன்றது நடிகர் ஜெயராமின் குடும்பமா என்பதுதான் படத்தின் மையக்கரு. அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் குடும்பத்தில் உள்ள மற்றவர்களை சந்தேகிப்பதுதான் கதை. காமெடியாக கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.
அதுவும் மலையாளத்தில் 26 படங்களில் ஒன்றாக இணைந்து நடித்தவர்கள் ஜெயராம் ஊர்வசி. அவர்கள் இருவரும் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் பரிமளா அண்ட் கோ என்பதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. ஏனெனில் இருவருமே காமெடி நடிப்பில் சளைத்தவர்கள் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
பரிமளா அண்ட் கோ கடந்த 5ம் தேதி வெளியானது. படம் ரிலீசான நாளி்ல் படத்துக்கு பாசிட்டிவான ரெஸ்பான்ஸ் கிடைத்தது. ஃபேமிலி ஆடியன்ஸ் பார்க்க வேண்டிய நல்ல காமெடியான படம் என்றும் ரசிகர்களிடையே விமர்சனம் எழுந்தது. அதனால் தாய்கிழவி படம் போல இந்த படமும் பெரிய அளவில் ஒரு வசூலை குவிக்கும் என்றும் பேசப்பட்டது.
விமர்சன ரீதியாக ஓரளவு நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பெரிய அளவில் சாதிக்கும் என்றும் படக்குழு தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. லைகா புரடக்சன்ஸ் நிறுவனமும் பசங்க நிறுவனமும் இணைந்து தயாரித்த இந்த படம் மொத்தமாகவே 7 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதுவும் 5வது நாளில் இந்த படத்தின் மொத்த வசூல் 64 லட்சம் ரூபாய் என்றும் சொல்லப்படுகிறது. இந்த ரீதியில் சென்றால் இந்த படத்தின் மொத்த வசூல் 10 கோடி ரூபாயை கூட நெருங்க வாய்ப்பில்லை என்று பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் கூறுகின்றன. பெரிய அளவில் வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பரிமளா அண்ட் கோ வசூல் 5வது நாளிலேயே தள்ளாடுவது படக்குழுவுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.





