சன் டிவியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற காமெடி தொடரில் பட்டாபி கேரக்டரில் காது கேளாதவராக நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகர் எம்எஸ் பாஸ்கர். பிறகு சினிமாவில் பல படங்களில் காமெடி ரோல்களில் நடித்தார். பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
குறிப்பாக பார்க்கிங் என்ற படத்தில் நாயகனாக ஹரீஷ் கல்யாண் வில்லனாக எம்எஸ் பாஸ்கர் நடித்திருந்தனர். வீட்டுக்குள் உள்ள பார்க்கிங் பகுதியில் காரை யார் பார்க் செய்வது என்ற பிரச்னைதான் அந்த ஈகோதான் படத்தின் மையக்கரு. இந்த படத்தில் நடிப்பில் எம்எஸ் பாஸ்கர் ரசிகர்களை மிரட்டியிருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் எம்எஸ் பாஸ்கர் கூறியதாவது, லேட் நைட் ஷூட்டிங் முடித்து நீண்ட நேரம் கழித்து வந்தாலும் கூட அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடுவது என்னுடைய பழக்கம். வெளியில் யாராவது சக்சஸ் மீட் பார்ட்டிக்கு கூப்பிடுகிறார்கள். நாம் விருந்தில் கலந்துக்கொள்கிறோம் என்றால் அங்கு நாம் கண்ட்ரோல் இல்லாமல் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
என்னை பொருத்த வரை அந்த மாதிரியான தீய பழக்கம் எதுவும் என்னிடம் இல்லை. இன்னும் வெளிப்படையாகவே சொல்கிறேன். மதுப்பழக்கம் எனக்கு ஒட்டிவிடக் கூடாது என்பதற்காக தான் நான் என்னுடைய காருக்கு டிரைவரே வைத்துக்கொள்ளவில்லை. நானே வண்டி ஓட்டறேன். எனக்கு ட்ரிங்கிங் விட டிரைவிங்கில்தான் போதை அதிகம்.
எவ்வளவோ பார்ட்டிகளுக்கு என்னை கூப்பிட்டிருக்காங்க. எந்த பார்ட்டியிலாவது நான் ட்ரிங்க் பண்ணியிருக்கேனா என்று சொல்லச் சொல்லுங்க பார்ப்போம். டிரைவர் வைச்சிருந்தேன்னா, டிரைவர்தான் இருக்கார் இல்லே, அப்புறம் என்ன சாப்பிடுங்க என்பார்கள். தவிர்க்க முடியாமல் போகலாம்.
ஆனால் இப்போது எனக்கு கார் டிரைவர் இல்லை என்பதால் டிரைவர் இல்லையா ரைட் ரைட் அப்ப நீங்க கிளம்புங்க என வெகு சுலபமாக சொல்லி விடுகின்றனர். அப்படி சொல்லி என்னை உடனே அனுப்பி விடுகின்றனர். அங்கு வரக்கூடியவர்கள் எல்லாரும் மது அருந்துபவர்கள் என்று சொல்ல முடியாது. வேண்டாம் என்று கிளீன் ஆக இருப்பவர்களும் இருக்கின்றனர் என்று நடிகர் எம்எஸ் பாஸ்கர் கூறியிருக்கிறார்.





