- Advertisement -
Homeபொழுதுபோக்குஎந்த நடிகரும் கால் சீட் கொடுக்க முன் வராததால் புதிய வழியை தேர்ந்தெடுத்தாரா இயக்குனர் முத்தையா......

எந்த நடிகரும் கால் சீட் கொடுக்க முன் வராததால் புதிய வழியை தேர்ந்தெடுத்தாரா இயக்குனர் முத்தையா… அடேங்கப்பா இந்த முடிவை யாரும் எதிர்பார்த்து இருக்கவே மாட்டாங்களே…

- Advertisement -

கிராமம் சார்ந்த கதைகளுக்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுப்பவர் இயக்குனர் முத்தையா. அவர் இயக்கத்தில் வெளியாகும் படம் என்றால் நிச்சயம், கதாநாயகன் தொடை தெரியும் அளவிற்கு வேட்டி கட்டி விட்டு, பெண்களுக்கு எதிராக பேசுபவர்களின் நெஞ்சிலில் ஓங்கி ஏத்தி விடுவார். திருக்கிவிட்ட மீசை, டவுசர் தெரிய வேட்டி கட்டு, மழைக்கு கூட பள்ளிக்கூடத்தை எட்டிப் பார்த்திராத கேரக்டர் தான் அவரது படத்தில் கதாநாயகனாக இருக்கும்.

அடுக்கடுக்கு வசனங்களை கையில் வைத்துக் கொண்டும், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை நம்பியுமே இவர் கதைக்களத்தை தயார் செய்து வருகிறார். இவரது இயக்கத்தில் வெளியான கொம்பன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவர் எடுக்கும் கதைகள், குடும்ப ஆடியன்ஸ்களை கவர்வதால் முத்தையாவிற்கு இன்னும் திரையுலகில் மார்க்கெட் இருக்கிறது என்று கூறலாம். சமீபத்தில் இவரது இயக்கத்தில் ஆர்யா நடித்த காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படத்திலும், தனது டெம்ப்ளேட்டை விடாமல் இறுக்கமாக பிடித்து வைத்திருந்தார் முத்தையா.

இந்த முறை ரசிகர்களை இந்த திரைப்படம் மேலும் எரிச்சல் ஊட்டியதால், வந்த இடம் தெரியாமல் ஓடிப்போனது. இதன்பிறகு, சிறிதும் இடைவேளை இன்றி தனது அடுத்த படத்திற்கு தயாரானார் முத்தையா. அருண் விஜய்யிடம் இதற்கான கதையை கூற அது ஒர்க் அவுட் ஆனதாகவும் தெரிகிறது.

- Advertisement -

ஆனால், ஏற்கனவே ஒப்புக்கொண்ட திரைப்படங்கள் காரணமாக அருண் விஜய்யால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கௌதம் கார்த்திக் மற்றும் விக்ரம் பிரபு ஆகியோரை இணைத்து வைத்து ஒரு படத்தை எடுக்க முடிவு செய்திருந்தார் முத்தையா. ஆனால் அவருக்கு அந்தத் திட்டமும் கைக்கூடவில்லை. இதனால், தனது மகனையே நடிகனாக்க இயக்குனர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக அவர் இந்த முறையும் மதுரை மண்ணைத்தான் நம்பியிருக்கப் போகிறாராம். போதைப் பொருள் கலாச்சாரத்திற்கு எதிராக இந்த திரைப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. படத்திற்கு அமரன் விஜய் என அவர் டைட்டில் வைக்கப் போகிறாராம். அது மட்டுமல்ல அந்த சமயத்தில் அமரன் திரைப்படத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த, வெத்தல போட்ட சோக்குல பாடலை தனது மகனுக்காக அவர் பயன்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்