- Advertisement -
Homeபொழுதுபோக்குகுண்டக்க மண்டக்க பார்ட்டியுடன் மீண்டும் இணைகிறாரா நடிகர் வடிவேலு? அவரே இதை பத்தி சொல்லி இருக்கறாரே?...

குண்டக்க மண்டக்க பார்ட்டியுடன் மீண்டும் இணைகிறாரா நடிகர் வடிவேலு? அவரே இதை பத்தி சொல்லி இருக்கறாரே? – அப்போ தியேட்டர்களில் சரவெடி தான்!

- Advertisement -

நடிகர் வடிவேலு என்றாலே மனசுக்குள் பலருக்கும் சிரிப்பு சத்தம் தான் கேட்கிறது. அந்த அளவுக்கு தனது காமெடி நடிப்பால் ரசிகர்களின் மனங்களை கட்டிப் போட்டவர் வைகைப்புயல் வடிவேலு. தனிப்பட்ட முறையில் பல விமர்சனங்கள் அவர் மீது இருந்தாலும் காமெடி நடிப்பில் வடிவேலு ஒரு நிகரில்லாத ஜாம்பவான்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் அர்ஜூன் விஜய் அஜீத்குமார் சூர்யா பிரசாந்த் விக்ரம் பார்த்திபன் பரத் முரளி சரத்குமார் ராகவா லாரன்ஸ் ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் வடிவேலு காமெடி நடிப்பில் அசத்தி இருக்கிறார். பல படங்களின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்ததே வடிவேலு காமெடி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சந்திரமுகி சிங்காரவேலன் தேவர்மகன் எங்கள் அண்ணா வெற்றிவேல் சக்திவேல் ராஜா வின்னர் ஏய் பகவதி எம்டன் மகன் என பல படங்களில் வடிவேலு நடிப்பு வேற லெவலில் இருந்திருக்கிறது. குறிப்பாக பார்த்திபன் வடிவேலு கூட்டணி காமெடி என்றாலே தியேட்டர்களில் கரவொலிக்கும் சிரிப்பொலிக்கும் பஞ்சமே இருக்காது.

பாரதி கண்ணம்மா வெற்றிக்கொடி கட்டு குண்டக்க மண்டக்க காதல் கிறுக்கன் காக்கை சிறகினிலே போன்ற படங்களில் பார்த்திபன் வடிவேலு இணைந்து நடித்திருந்தனர். இதில் வடிவேலு பார்த்திபனிடம் ஏதாவது வம்பு பேசி வசமாக சிக்கிக் கொள்வதும் ஏதேனும் சிக்கல்களில் வடிவேலுவை சிக்க வைத்து பார்த்திபன் வேடிக்கை செய்வதும் ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைக்கும்.

குறிப்பாக குண்டக்க மண்டக்க பார்ட்டியாக உள்ள நடிகர் பார்த்திபனுடன் வடிவேலு நடித்த காமெடி காட்சிகள் பெரிய அளவில் ரசிக்கப்பட்டிருக்கின்றன. நடிகர் பார்த்திபன் இயக்குனர் தயாரிப்பாளராக உள்ள நிலையில் இப்போது மீண்டும் வடிவேலுவும் அவரும் இணைந்து நடிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

சமீபத்தில் நடிகர் வடிவேலுவை சந்தித்த இயக்குனர் பார்த்திபன் ஒரு கதை சொல்லி இருக்கிறார். கதையை கேட்டவுடன் வடிவேலுவும் பிரமாதமா இருக்கே என பாராட்டி, படத்தில் நடிக்கவும் ஓகே சொல்லி விட்டார். அந்த சந்திப்பில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் பார்த்திபன், நகைச்சுவையில் மட்டுமல்ல நடிப்பிலும் ஈடில்லாதவர் வடிவேலு. சந்தித்தோம் இன்று, விரைவில் படம் வெளியாகும் என்று கூறியுள்ளார்.

சற்று முன்