விஜய் டிவியில் இப்போது பிக்பாஸ் சீசன் 9 ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது 80 நாட்களை தொட்டுவிட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில தினங்களாக போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து அங்குள்ள போட்டியாளர்களை சந்தித்து செல்கின்றனர். அதனால் வீடு கலகலப்பாக மாறியிருக்கிறது.
இந்நிலையில் சான்ட்ரா திவ்யா கணேஷ் மகத் கானா வினோத் அரோரா ஆகியோர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து சந்தித்துள்ளனர். இதில் அரோராவுக்கு மட்டும் அவரது நண்பர்கள் 2 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர். தொடர்ந்து மற்ற போட்டியாளர்களின் குடும்பத்தினரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டுக்குள் கம்ருதீன் பார்வதி காதல் பல நாட்களாக பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது. இதற்கிடையே ஒரு நாள் முழுவதும் இருக்கும் வகையில் பார்வதியின் அம்மா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். அவர் வந்தவுடன் வீட்டுக்குள் பெரிய பூகம்பம் வெடிக்கும் என்ற எதிர்பார்த்த நிலையில் அது புஸ்வாணமாகி விட்டது.
தனது மகள் பார்வதியை கண்டிப்பார், கம்ருதீனை அழைத்து பேசுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரும் பார்வதியை போலவே பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தது முதல் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கிறார். மகள் பார்வதியை மிஞ்சும் அளவுக்கு அவரது அம்மாவும் பேசிக்கொண்டே இருப்பது பார்வையாளர்களுக்கு பலத்த அதிர்ச்சியை தந்துள்ளது.
இதைத் தொடர்ந்து கம்ருதீனின் அக்கா மற்றும் அவரது கணவர் குழந்தையுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர். அப்போது கம்ருதீனிடம் தனியாக நின்று பேசும் அவரது அக்கா, பிக்பாஸ் வீட்டுக்குள் நீ வந்தது இதற்காக அல்ல. உனக்கு பார்வதி தங்கச்சி என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறார். அதைக்கேட்டு கம்ருதீனும் சிரித்தபடி ஆமோதிக்கிறார்.
அதனால் இனி 100 சதவீதம் பார்வதியின் காதல் வலையில் சிக்கிக்கொள்ள கம்ருதீன் முன்வராமல் தப்பித்து விடுவார். ஏனெனில் பெற்றோர் இல்லாத கம்ருதீனுக்கு அவரது அக்கா தான் மிக முக்கியமான உறவு. அவரது சொல்லை மீறி அவர் நடக்க மாட்டார் என்பதால் பார்வதியின் காதல் வலையில் சிக்காத மீனாக கம்ருதீன் தப்பித்து விட்டார் என்று பிக்பாஸ் பார்வையாளர்கள் சந்தோஷமாக பெருமூச்சு விடுகின்றனர்.





