தமிழ் சினிமாவில் தொடர்ந்து இந்த 2026 ஆண்டு துவக்கம் முதல் வெற்றி படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் தாய்க்கிழவி மொத ராத்திரி மண்டாடி கருப்பு விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் டிசி பிளாஸ்ட் கருப்பு உள்ளிட்ட படங்களின் வரிசையில் தற்போது பத்தா படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.
அதே போல் இந்த ஆண்டில் வெளியான டோரதி படம் குறித்தும் ஒரு தரப்பில் எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் அந்த படத்துக்கும் வித்யாசமான கதைக்களம் என்ற பாராட்டு கிடைத்துள்ளது. மேலும் வருகிற 15ம் தேதி ஜெயிலர் 2 படம் ரிலீஸாக உள்ளது. இந்த படமும் பெரிய அளவில் வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் வெற்றியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களின் வரிசையில் தற்போது வெளியாகி உள்ள பத்தா திரைப்படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்தை பாலாஜி தரணிதரன் டைரக்ட் செய்து இருக்கிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கிறார்.
ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மற்றும் சீதக்காதி ஆகிய படங்களை இயக்கியவர் பாலாஜி தரணிதரன். மூன்றாவது முறையாக பாலாஜி தரணிதரன் விஜய் சேதுபதி கூட்டணி பத்தா படத்தில் இணைந்து இந்த படம் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த படத்தில் லிஜோ மோல் ஜோஸ் சாய் ஹரிகிருஷ்ணன் அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். பத்தா படம் ரிலீசான மூன்று நாட்களில் நேர்மறையான விமர்சனங்களை ரசிகர்களிடையே பெற்று வருகிறது.
இந்த நிலையில் 3 நாட்களில் பத்தா படம் தமிழ்நாட்டில் 8 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. பத்தா படத்தின் கதை 1980களில் நடக்கிற ஒரு பீரியட் படமாக உள்ளது. இந்த படத்தின் கதைக்களம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருவதால் சூப்பர் ஹிட் படங்களின் பத்தா படமும் இடம்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





