சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து இப்போது ஆந்திர மாநில துணை முதல்வராக இருப்பவர் நடிகர் பவன் கல்யாண். அவரைப் போலவே தமிழ்நாட்டிலும் சினிமாவில் நடிகராக இருந்து முதல்வராகி இருப்பவர் விஜய். விஜயவாடாவில் நடந்த தசரா விழாவில் விஜயவாடா உத்சவ் நிகழ்ச்சியில் விஜய் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விஜய் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் இருவரும் ஒரே மேடையில் இருப்பார்கள் என்று ஒரு தகவல் பரவியது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளாமல் பவன் கல்யாண் தவிர்த்து விட்டார். இது தேவையற்ற விவாதங்களை ஏற்படுத்தும் என்று பவன் கல்யாண் நினைத்திருக்கலாம். அதே நேரத்தில் லண்டனில் நடிகர் அஜீத்தை விஜய் சந்தித்தது பெரிய அளவில் சர்ச்சையான நிலையில் அதனால் தனக்கும் அந்த சர்ச்சை வேண்டாம் என்று பவன் கல்யாண் கருதியிருக்கலாம் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.





