- Advertisement -
Homeபொழுதுபோக்குபுதிய படங்கள் ரிலீஸ் செய்தால் 7 நாட்களுக்கு 5 காட்சிகளுக்கு அரசு அனுமதி - தியேட்டர்...

புதிய படங்கள் ரிலீஸ் செய்தால் 7 நாட்களுக்கு 5 காட்சிகளுக்கு அரசு அனுமதி – தியேட்டர் உரிமையாளர்களுக்கு இது லாபம் தருமா?

- Advertisement -

புதிய படங்கள் ரிலீஸ் ஆகும் போது பண்டிகை நாள் எனில் சிறப்பு காட்சியுடன் 5 காட்சிகள் திரையிட்டுக் கொள்ள முதலில் அரசு அனுமதி இருந்தது. மற்ற நாட்களில் புதிய படங்கள் ரிலீஸ் என்றால் அரசிடம் அனுமதி பெற்று ரிலீஸ் ஆன முதல் நாளில் மட்டும் சிறப்பு காட்சியுடன் 5 காட்சிகள் திரையிட்டு கொள்ளலாம்.

இந்த சூழலில் நடிகர் விஜய் புதிய படம் எது ரிலீஸ் ஆனாலும் 7 நாட்களுக்கு 5 சிறப்பு காட்சிகள் திரையிடவும் பண்டிகை நாட்கள் உள்ளூர் விசேஷ நாட்கள் சனி ஞாயிறு என 5 காட்சிகள் திரையிட்டுக் கொள்ளலாம் என்ற முக்கிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அவரது இந்த உத்தரவு தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரிய அளவில் பலன் தராது என தெரிய வந்துள்ளது.

- Advertisement -

இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் சிலர் கூறியிருப்பதாவது, இந்த அறிவிப்பால் சில பெரிய படங்கள் மட்டுமே பலன் அடையும். ரஜினி கமல் அஜீத்குமார் சூர்யா சிம்பு தனுஷ் சிவகார்த்திகேயன் போன்ற நட்சத்திர ஹீரோக்களுக்கு மட்டுமே இந்த உத்தரவால் லாபம் கிடைக்கும். மற்ற ஹீரோக்களின் படங்கள் முதல் 7 நாட்கள் 5 காட்சிகள் என்பதால் எந்தவித பலனும் இருக்காது.

அந்த அளவுக்கு ரசிகர்களின் கூட்டம் வராது. சின்ன படங்கள் கூட சில நாட்கள் சில காட்சிகள் ஓடுவது அபூர்வம். இந்த உத்தரவால் அவர்களுக்கு எந்த பயனும் இல்லை. அரசின் இந்த உத்தரவு மாற்று மொழியை திரைப்படங்களுக்கு பொருந்துமா என தெரியவில்லை. அதற்கும் பொருந்தும் என்றால் இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடத்தில் ஹிட் ஆகும் படங்கள் தமிழில் கூடுதலான காட்சிகளை பெற வாய்ப்புள்ளது.

- Advertisement -

ஆனால் அப்படி செய்தால் தமிழ் படங்களுக்கு பாதிப்பு ஏற்படும். தமிழ் படங்களுக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காத ஒரு சூழ்நிலை உருவாகும் என்று அவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து ரசிகர்கள் தரப்பில் கூறுகையில், தியேட்டர்களில் டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அவர்கள் 450 முதல் 300 ரூபாய் வரை டிக்கெட் விலை உயர்த்த வேண்டும் என்று அரசிடம் வேண்டுகோள் வைக்கிறார்கள். அதை ஏற்று தமிழக அரசு டிக்கெட் விலையை உயர்த்தினால் அது சினிமாவுக்கு இன்னும் பெரிய இழப்பாக அமையும். தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருபவர்கள் எண்ணிக்கை இன்னும் வெகுவாக குறையும். படங்களின் தோல்வி இன்னும் அதிகரிக்கும் என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -

சற்று முன்