- Advertisement -
Homeபொழுதுபோக்குயோகிபாபு அம்மாவாக நடிப்பது இந்த அழகான நடிகையா - ஒரு காலத்துல புது வசந்தமா தமிழ்...

யோகிபாபு அம்மாவாக நடிப்பது இந்த அழகான நடிகையா – ஒரு காலத்துல புது வசந்தமா தமிழ் சினிமாவுக்கு வந்தவங்க சார் அவங்க

- Advertisement -

தமிழ் சினிமாவில், காமெடி நடிகராக வாழ்க்கையை துவங்கும் சிலர் சில ஆண்டுகளிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி, கதாநாயகர்களாகி விடுகின்றனர். வடிவேலு, சந்தானம், சூரி வரிசையில் நடிகர் யோகி பாபுவும் ஒருவர், துவக்கத்தில் துணை நடிகர்களில் ஒருவராக தான் திரையில், யோகிபாபு தோன்றினார். பின், தனியாக காமெடி செய்ய ஆரம்பித்தார்.

இவரது உடல்வாகு, தலைமுடி, முகம் தாண்டி இவர் பேசும் வசனங்களால் ரசிகர்களின் அதிக கவனம் பெற்றார். குறிப்பாக, எனக்கே விபூதி அடிக்க பார்த்தியல்ல நீ, என காக்க முட்டை படத்தில் இவர் பேசிய டயலாக் டிரண்டிங் ஆனது. மண்டேலா படத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக சிறந்த நடிகராக தன்னை வெளிப்படுத்தினார். தொடர்ந்து தர்மபிரபு, கூர்கா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இப்போது, சன்னிதானம் பி.ஓ (போஸ்ட்) என்ற படத்தில், யோகிபாபு ஹீரோவாக நடிக்கிறார். புதுமுக இயக்குநர் அமுதா சாரதி என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம் தமிழில் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்படும் படமாக உள்ளது. இதில் யோகி பாபுவுடன் கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரமோத் ஷெட்டி நடிக்கிறார்.

இந்த படத்தின் மிக முக்கியமான அம்சம், யோகிபாபுவின் அம்மாவாக நடிப்பவர்தான். சிறுவயதில் காணாமல் போன தாய்க்கும், மகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை சொல்லும் கதைதான், சன்னிதானம் பி.ஓ., இந்த படத்தின் மற்றொரு சிறப்பு அம்சம், இது சபரிமலை பின்னணியில் உருவாகி படமாக உள்ளது.

- Advertisement -

புதுப்புது அர்த்தங்கள் படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சித்தாரா. விக்ரமன் இயக்கிய புதுவசந்தம் படம் மூலம், தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார், தொடர்ந்து புரியாத புதிர், நட்புக்காக, அர்ச்சனா ஐபிஎஸ், உன்னை சொல்லி குற்றமில்லை, படையப்பா, நாகேஷ் திரையரங்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் சித்தாரா நடித்திருக்கிறார். நிறைய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

சன்னிதானம் பிஓ போஸ்ட் படத்தில், யோகிபாபுவின் அம்மாவாக நடிப்பது சித்தாரா தான். ஏற்கனவே நாகேஷ் திரையரங்கம் படத்தில், நடிகர் ஆரிக்கு சித்தாரா, அம்மாவாக நடித்திருந்தார், இப்போது, யோகிபாபுவுக்கு அம்மாவாக நடிக்கிறார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றால், தமிழ் சினிமாவில் தொடர்ந்து அம்மா கேரக்டரில் சித்தாராவை பார்க்கலாம்.

- Advertisement -

சற்று முன்