- Advertisement -
Homeபொழுதுபோக்குபுதிய தொழில்நுட்பத்தில் சிவகார்த்தியேகன் படம் - படத்தை சீக்கிரத்தில் முடித்தால், ஏலியனை நேருக்கு நேராக பார்க்க...

புதிய தொழில்நுட்பத்தில் சிவகார்த்தியேகன் படம் – படத்தை சீக்கிரத்தில் முடித்தால், ஏலியனை நேருக்கு நேராக பார்க்க ரசிகர்களுக்கு வாய்ப்பு

- Advertisement -

திருப்பூரை சேர்ந்த இளம் இயக்குநர் ரவிக்குமார் இயக்கிய படம் இன்று நேற்று நாளை. டைம் டிராவல் சப்ஜெக்ட்டை மையக்கருவாக கொண்ட இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. ஹாலிவுட் படத்துக்கு இணையான ஒரு படத்தை, தமிழ் ரசிகர்களுக்கு புரியும்படியாக ஒரு விதத்தில், திரைக்கதை அமைத்து, இயக்கி இருந்தார் ரவிக்குமார்.

விஷ்ணு விஷால், கருணாகரன் ஆகியோர் பிரதான கேரக்டர்களில் நடித்த இந்த படத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தை வைத்து டைம் டிராவல் இயந்திரத்தில் ஏறினால், கடந்து காலத்துக்கு சென்றுவிட முடியும். பிறகு, மீண்டும் இப்போது வாழும் வாழ்க்கைக்குள் வந்துவிட முடியும். மிக சிக்கலான இந்த கதையை, மிக எளிமையாக படமாக்கி ரசிகர்கள், தமிழ் சினிமா துறையினர் பாராட்டைப் பெற்றவர் இயக்குநர் ரவிக்குமார்.

- Advertisement -

அதே போல் ரவிக்குமாரின் நெருங்கிய நண்பர்கள் திருப்பூரைச் சேர்ந்த ராம்குமார் எடுத்த படம்தான் முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன். முண்டாசுப்பட்டி காமெடி நிறைந்த கிராமத்து கதையாகவும், ராட்சசன், காட்சிக்கு காட்சி மிரட்டும் திகில் படமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல், இவர்களது மற்றொரு நண்பர் சரவண் எடுத்த படம்தான் மரகதநாணயம் என்ற வெற்றிப்படம். இப்படி தமிழ் சினிமாவில் பனியன் தொழில் நகரமான திருப்பூரை சேர்ந்த இயக்குநர்கள் அறிமுகமாகி, வெற்றி படங்களை தந்து வருகின்றனர்.

இன்று நேற்று நாளை படத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு போன நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ரவிக்குமாருடன் இணைந்த படம்தான் அயலான். ஏலியன் கதையை மையமாக கொண்ட இந்த படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில்தான் அயலான் படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசை என்பது இன்னும் கூடுதல் சிறப்பு.

- Advertisement -

இந்நிலையில், அயலான் படத்தை 3டி தொழில்நுட்பத்தில் வெளியிட்டால், இன்னும் படம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். படத்தில் வரும் ஏலியன் காட்சிகள் 3டி தொழில்நுட்பத்தில் பார்க்கும்போது மிக அருகில் முகத்துக்கு நேராக ஏலியனை பார்க்கும் அனுபவம் ரசிகர்களை இன்னும் மகிழ்விக்கும் என அயலான் படக்குழுவினர் கருதுகின்றனர்.

ஆனால் அயலான் படத்தின் முதல் பிரதியை எடுத்துக் காட்டிய பிறகே, 3டி தொழில்நுட்பத்தை பெற முடியும். அதற்கு பிறகு 3டி தொழில்நுட்பத்தில் அயலான் படத்தை உருவாக்க இரண்டு மாதங்கள் வரை கால அவகாசம் தேவைப்படும் என்பதால் படத்தை சீக்கிரமாக முடித்தால் மட்டுமே இது சாத்தியமாகும். பொங்கலுக்கு 2 மாதங்கள் முன்னதாக, அயலான் முழுமையாக முடிக்கப்பட்டால் மட்டுமே இது சாத்தியம். இல்லை எனில், வழக்கமாக படக்காட்சி போலவே அயலான் காட்சியும் திரையில் காட்டப்படும்.

- Advertisement -

சற்று முன்