- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை ஊர்வசி மீசை வளர்த்துக்க முடியாது, சினிமாவில் அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? - நடிகர் கமல்ஹாசன்...

நடிகை ஊர்வசி மீசை வளர்த்துக்க முடியாது, சினிமாவில் அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? – நடிகர் கமல்ஹாசன் ஓபன்டாக்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை ஊர்வசி. இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கி ஹீரோவாக நடித்த முந்தானை முடிச்சு என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் பரிமளம் என்ற கேரக்டரில் ஊர் பண்ணையாரின் மகளாக நடித்திருப்பார். முதல் படத்திலேயே நடிப்பில் முத்திரை பதித்தவர் நடிகை ஊர்வசி.

தமிழில் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு என மற்ற மொழி படங்களிலும் ஏராளமாக நடித்திருக்கிறார். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமலுக்கு மனைவியாக மாமி கேரக்டரில் அட்டகாசமாக நடித்திருப்பார். இன்னும் சில படங்களிலும் கமலுடன் ஊர்வசி ஜோடியாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்த அவர், இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் அதில் அழுத்தமான நேர்த்தியை தனது நடிப்பை நடிகை ஊர்வசி வெளிப்படுத்தி விடுவார். சமீபத்தில் ஆர்ஜே பாலாஜி இயக்கிய வீட்ல விசேஷம் படத்தில் வளர்ந்த பிள்ளைகளுக்கு தாயாக உள்ள அவர் கர்ப்பிணியாகி விடுவார். சத்யராஜ் கணவராக நடித்திருப்பார். அந்த படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் ஊர்வசி நடிப்பு வேற லெவலில் இருந்தது.

மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயனை நடிகை ஊர்வசி காதல் திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். விரைவில் அவரும் சினிமாவில் அறிமுகம் ஆக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கணவர் மனோஜ் கே ஜெயனை ஊர்வசி பிரிந்த நிலையில், அவர் 2வது திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் ஊர்வசி தனித்து இருக்கிறார்.

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன், நடிகை ஊர்வசியை நடிப்பு ராட்சஷி என்று சொல்வது வழக்கம். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், நடிகை ஊர்வசி குறித்து கூறியதாவது, இது யாருக்குமே தெரியாது. ஊர்வசி நல்ல எழுத்தாளர். அவங்க கொஞ்சம் முனைப்பு காட்டியிருந்தால் இந்த ஆணாதிக்க உலகில் கொஞ்சம் இடம் கொடுத்திருந்தார் அவர் டைரக்டராக மாறியிருப்பார்.

அதுக்காக அவங்க மீசை எல்லாம் வளர்த்துக்க முடியுமா? இவங்களோட போட்டி போட அவங்க மீசை வளர்த்துக்கிட்டு ஆம்பளை வேஷம் போட முடியாது. அவங்க அந்த நளினத்தோட சொல்ற கதைகள் எனக்கு புரியும். எங்க அம்மா சொன்ன கதைகளை தானே நான் இப்போ ஜனங்களுக்கு திருப்பிச் சொல்லிட்டு இருக்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்