- Advertisement -
தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை தந்தவர் பாடல் ஆசிரியர் கவிஞர் நா முத்துக்குமார். அவரது பாடல்கள் பலவும் தேனில் விழுந்த பலாச்சுளை போல இனிப்பானவை. அவர் இளம் வயதிலேயே மறைந்த நிலையில் அவரது மகன் சினிமாவின் பாடல் ஆசிரியராக அறிமுகம் ஆகிறார். ராஜாஸ் பிளேலிஸ்ட் என்ற படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடலாசிரியராக நா முத்துக்குமாரின் மகன் ஆதவன் முத்துக்குமார் அறிமுகமாகிறார். இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது.





