- Advertisement -
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேர்காணலில் பேசிய கவிஞர் வாலி கூறியதாவது, பேச்சுலராக இருந்த போது வீட்டுக்கு வந்து விட்டால் மதுபானம் அருந்துவேன். அப்படி ஒருநாள் நிதானம் இல்லாத போதையில் இருந்த போது தயாரிப்பாளர் கிருஷ்ணன் பஞ்சு என்னை பாட்டு எழுத நேரில் வருமாறு புரடக்சன் மேனேஜர் வந்து அழைக்கிறார். நாளை காலையில் ரெக்கார்டில் மதியம் ஷூட்டிங் செய்ய திட்டமிட்டுள்ளனர். அது நாகேஷ் நடித்த சர்வர் சுந்தரம் படம். போதையில் போய் 30 நிமிடங்களில் நான் எழுதி தந்த அந்த பாடல்தான் அவளுக்கு என்ன அழகிய முகம் என்ற பாடல் என்று கவிஞர் வாலி கூறியிருக்கிறார்.





