- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர் எழுதி தந்ததை தான் நான் பாட்டு சந்தையில் விற்றுக்கொண்டு இருக்கிறேனா? - தன் மீது...

அவர் எழுதி தந்ததை தான் நான் பாட்டு சந்தையில் விற்றுக்கொண்டு இருக்கிறேனா? – தன் மீது எழுந்த குற்றச்சாட்டு கவிஞர் வைரமுத்து தந்த நச் பதில்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து கூறியதாவது, தமிழ் திரையுலகில் என் மீது சாட்டப்பட்ட முதல் குற்றச்சாட்டு அவதூறு என்னவென்றால் வைரமுத்து எழுதவில்லையாம். அவரது மனைவி தமிழ் படித்தவராம். அவர் டாக்டர் பட்டம் பெற்றவராம். அவர் எழுதி கொடுத்ததை வாங்கி வந்துதான் இவர் பாட்டு சந்தையில் விற்றுக்கொண்டு இருக்கிறாராம் என்ற குற்றச்சாட்டு வந்தது. உங்கள் மனைவிதான் உங்களுக்கு எழுதி தருகிறாரே என்ற கேள்விக்கு நான் ரசித்து சொன்ன பதில், இப்போதும் எனக்கு நினைவுக்கு வருகிறது. அப்படியா? எனக்கு எழுதி தருகிற அளவுக்கு ஒரு புகழ்பெற்ற அறிவாளியை நான் மனைவியாக பெற்றிருக்கிறேன் என்பதை இந்த சமூகம் ஒப்புக்கொள்கிறது. வாழ்த்துகள் என்று சொன்னதாக கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.

சற்று முன்