- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து கூறியதாவது, நான் ஒரு 12 நிமிடங்களில் எழுதிக்கொடுக்க நம்முடைய தேவா அதை ஒரு மணி நேரத்தில் இசையமைக்க ஒரே நாளில் ஒலிப்பதிவாகி மறுநாள் ஒளிப்பதிவு செய்யப்பட்டது இந்த பாட்டு. எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ என்ற அந்த பாட்டு மொத்தத்தில் மிக குறைந்த நேரத்தில் நான் எழுதிய பாட்டு என்று கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார். பாட்ஷா படத்தில் இடம்பெற்ற ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா என்ற ரஜினிகாந்த் பாடி நடித்த அந்த பாடல். இது இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு ஹிட் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.





