கடந்த 10ம் தேதி இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைந்த நிலையில் அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் உள்ள அவரது பண்ணையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த துக்க நிகழ்வில் இறுதி சடங்கில் கவிஞர் வைரமுத்து நடிகை ராதிகா மறைந்த இயக்குனர் பாரதிராஜா நடிகர் நிழல்கள் ரவி சீமான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
இந்நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக அவரது படங்களில் பணிபுரிந்த கே பாக்யராஜ், தனது குருநாதர் மறைந்த 17வது நாளில் அவரும் மறைந்து விட்டார். குருவின் மறைவு நடந்த 2 வாரங்களில் அவரது சீடர் கே பாக்யராஜூம் மறைந்து போனது தமிழ் சினிமா துறையினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பலத்த அதிர்ச்சியை தந்துள்ளது.
கவிஞர் வைரமுத்து, பாரதிராஜாவின் சீடர் இயக்குனர் கே பாக்யராஜ் மறைந்த நிலையில் இப்போது பாரதிராஜாவின் நினைவிடத்துக்கு சென்று அந்த புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். மேலும் அந்த பதிவில் கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது, இமயத்தைப்
புதைத்த இடம் இதுதான். தூங்கு ராஜா தூங்கு.
ஓடி ஓடிக் களைத்தவனே கலையாத உறக்கத்தில் கனவுகளற்ற உறக்கத்தில் ஓய்வு கொள். மண்ணை இழுத்துப் போர்த்துப் படுத்திருக்கும் உன்னை குளிரோ மழையோ வெயிலோ புயலோ ஒன்றும் செய்யாது. நலம் கேட்க வந்த நான் நல்ல செய்தி கொண்டு வரவில்லை.
இதே இடத்தில் என்னோடு நின்று இறுதி மரியாதை செலுத்திய உன் சீடன் உனைத்தேடி வந்துவிட்டான். ஜோடிக் குதிரைகளை இழந்து கவிழ்ந்து கிடக்கிறது கலைத்தேர். கடமை இருக்கிறது. இந்த மண்ணகத்தில் உனக்கொரு மணிமண்டபம்; அரசுக்குக் கோரிக்கை வைக்கிறேன்.
முதலமைச்சர் விஜயைச் சந்திக்கவும் தயங்கமாட்டேன். இந்த இடம் கலைக்கோயிலாக என்று கட்டப்படுமோ அன்று தேனி மாவட்டம் முழுக்க தேவர்கள் பூச்சொரிவர் என்று அந்த பதிவில் இயக்குனர் கே பாக்யராஜ் மறைவை மறைந்த இயக்குனர் பாரதிராஜாவிடம் அவரது நினைவிடத்தில் சொல்வது போல் கவிதை எழுதியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து.





