- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல்வர் விஜயுடன் சிரித்தபடி போஸ் தந்த நடிகர் கருணாஸ் - லொடுக்கு பாண்டியை விளாசித் தள்ளிய...

முதல்வர் விஜயுடன் சிரித்தபடி போஸ் தந்த நடிகர் கருணாஸ் – லொடுக்கு பாண்டியை விளாசித் தள்ளிய தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் கருணாஸ். அம்பாசமுத்திரம் அம்பானி திண்டுக்கல் சாரதி ரகளபுரம் போன்ற சில காமெடி படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். முக்குலத்தோர் புலிப்படை என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் கருணாஸ் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் கருணாஸ் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கருணாஸ் அதிமுக ஆதரவில் திருவாடானை தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆனால் இந்த முறை திமுக கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு கருணாஸ் தோல்வியை சந்தித்தார். இதற்கிடையே தமிழக வெற்றிக்கழகம் கட்சியை நடிகர் விஜய் துவக்கிய போதும் அவர் கட்சி கூட்டங்களை நடத்திய போதும் விஜய் குறித்து நடிகர் கருணாஸ் கடுமையாக விமர்சித்தார்.

பாசிசம் குறித்து பாதரசம் பேசுகிறது. பாதரம் என்பது விஷம் என்றெல்லாம் தவெக தலைவர் விஜயை கருணாஸ் வசை பாடினார். மேலும் ஒரு நடிகராக இருப்பதால் விஜயை பார்க்க கூட்டம் வருகிறது. வருகிற கூட்டம் ஓட்டாக எல்லாம் மாறாது. இந்த 2026 தேர்தலுடன் தவெக அரசியலை விட்டே ஓடிவிடும் என்றெல்லாம் ஆணவப்போக்கில் பேசியவர்தான் கருணாஸ்.

- Advertisement -

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது சங்கத்தின் தலைவர் நாசர் பொருளாளர் கார்த்தி துணைத் தலைவர்கள் கருணாஸ் மற்றும் பூச்சிமுருகன் ஆகியோர் விஜயை சந்தித்தனர். அப்போது விஜய் அருகே நின்று சிரித்தபடி புகைப்படத்துக்கு போஸ் தந்திருக்கிறார் நடிகர் கருணாஸ்.

இதைப்பார்த்து ஆத்திரமடைந்த தவெக கட்சியினர் மற்றும் தளபதி ரசிகர்கள், லொடுக்கு பாண்டிக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா? திமுக மேடைகளில் அவரை பற்றி இவ்வளவு கேவலமாக பேசிவிட்டு இப்போது விஜய் முதல்வரான பிறகு இப்படி பக்கத்தில் நின்று போஸ் கொடுக்கிறாரே? என்று கண்டபடி திட்டி விமர்சித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்