- Advertisement -
Homeபொழுதுபோக்குபோர் விமானங்கள் பறந்த வானில் புறாக்கள் பறக்கட்டும்… இந்திய ரோஜாக்களை பரிசளிக்கிறோம் - கவிஞர் வைரமுத்து...

போர் விமானங்கள் பறந்த வானில் புறாக்கள் பறக்கட்டும்… இந்திய ரோஜாக்களை பரிசளிக்கிறோம் – கவிஞர் வைரமுத்து வெளியிட்ட பதிவு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர கவிஞராக பாடல் ஆசிரியராக வலம் வருபவர் வைரமுத்து. இதுவரை 6 முறை சிறந்த கவிஞராக தேசிய விருது பெற்ற பெருமைக்குரியவர். கள்ளிக்காட்டு இதிகாசம் கருவாச்சி காவியம் மூன்றாம் உலகப்போர் தண்ணீர் தேசம் என் ஜன்னலுக்கு வெளியே என் குளத்தில் கல் எறிந்தவர்கள் என ஏராளமான நூல்களை எழுதியவர்.

தெய்வப்புலவர் என அழைக்கப்படும் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை வள்ளுவன் மறை வைரமுத்து உரை என்ற தமிழில் வைரமுத்து பொருள்விளக்கம் தந்து சமீபத்தில் எழுதியிருக்கிறார். அந்த நூல் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. பாடல் ஆசிரியராக மட்டுமின்றி ஒரு கவிஞராக எழுத்தாளராக வைரமுத்து இலக்கிய தளத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

திரைப்படங்கள் மட்டுமின்றி ஒரு சமூக பொறுப்புள்ள தனி மனிதராகவும் தன்னுடைய எழுத்துகளில் சமூகம் குறித்த அக்கறையை வைரமுத்து வெளிப்படுத்துவார். அதற்கான பதிவுகளை அவ்வப்போது தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டு தன் உணர்வுகளை பகிர்ந்து கொள்வார். அந்த வகையில் இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் குறித்த ஒரு பதிவை வைரமுத்து தற்போது இணையத்தில் பதிவிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.

தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, 67 ஆயிரம் உயிர்களைக் காவு கொண்டபின் இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம் முடிவுக்கு வருவதாக தோன்றுகிறது. பாலஸ்தீனத்திற்கே கூடுதல் இழப்புகள் என்பதால் இஸ்ரேலின் விட்டுக்கொடுத்தல்களை உலகம் வேண்டுகிறது.

- Advertisement -

காசாவின் பிணைக்கைதிகளும் இஸ்ரேலின் சிறைக் கைதிகளும் காதலர்கள் பூக்களை பரிமாறிக் கொள்வதைப் போல மரியாதையாக விடுவிக்கப்பட வேண்டும். முதலில் பாலஸ்தீனத்திற்கு உணவுப் பாதையை திறந்து விடுங்கள். எலும்புக் கூடுகளுக்குள் உயிர் ஊறட்டும். கூடாரங்கள் மெல்ல மெல்ல குடில்கள் ஆகட்டும்.

போர் விமானங்கள் பறந்த வானில் புறாக்கள் பறக்கட்டும். சமாதானத்தை முன்னெடுத்த அமெரிக்க அதிரபர் ட்ரம்ப் ஏற்றுக்கொண்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இருவருக்கும் இந்திய ரோஜாக்களை பரிசளிக்கிறோம். உலக நாடுகள் பல ஒப்புக்கொண்ட வண்ணம் பாலஸ்தீனம் தனி நாடாகட்டும். வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் வளர்கவே விடியும் பூமி அமைதிக்காக விடிகவே என்று அந்த பதிவில் கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்