- Advertisement -
பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது சென்னை விருகம்பாக்கம் காவல்துறையினர் பாலியல் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இளம்பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இந்த வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து தன்னை ஏமாற்றியதாக இளம் பெண் ஒருவர் புகார் அளித்திருக்கிறார். விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 8வது சீசனில் முத்துக்குமரன் பிக்பாஸ் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.





