வேட்டையன் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது கூலியில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் தான் இதனை இயக்கி வருகிறார். ரஜினிகாந்தின் முந்தைய திரைப்படங்களில் பிற மாநிலத்திலிருந்து முக்கிய நடிகர் நடிகைகள் இடம் பெற்றிருந்தார்கள். அதையேதான் இந்த திரைப்படத்திலும் ஃபாலோ செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
அதன்படி, படத்தில் வில்லனாக வருகிறார் நாகர்ஜூனா. அதேபோல் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த சோபின் சகிர் இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இது போக கன்னட திரை உலகில் இருந்து உபேந்திராவும் இடம்பெற்று இருக்கிறார். ரஜினியின் நண்பனாக சத்யராஜ் வருகிறார்.
சத்யராஜின் மகளாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். இப்படி ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கூலி திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கிறது. இதில் பலரையும் ஆச்சரியப்படுத்தும் தகவல் எதுவென்றால் அமீர் கானும் படத்தில் உள்ளது தான். ஜெய்ப்பூரில் நடந்த படப்பிடிப்பில் அவரை நடிக்க வைத்திருக்கிறார்கள்.
இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடாமல் சஸ்பென்சியிலேயே வைத்திருக்கிறது படக்குழு. இந்த படத்தில் அறிவிப்பு வீடியோவிலேயே தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் ஒன்று இது தங்க கடத்தலை பற்றி பேசும் அல்லது அது தொடர்பான கதையாக இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது.
படத்தில் ரஜினிகாந்த்திற்கு தேவா எனும் கதாபாத்திரத்தை கொடுத்து இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். பெரும்பாலான காட்சிகள் துறைமுகத்திலேயே எடுக்கப்பட்டிருப்பதால், விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்ட செட்போட்டு சூட்டிங் செய்து இருக்கிறார்கள். அனிருத்தின் இசையில் இந்த படத்தின் பாடல்கள் பட்டையை கிளப்பும் என்பதற்கு முன்னுதாரணமாக அமைந்தது, அண்மையில் ரிலீசான சிக்குடு பாடலின் சில வரிகள்.
அனேகமாக இந்த திரைப்படம் மே அல்லது ஜூன் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த திரைப்படத்தின் ஒரு பாடலுக்கு ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிகை பூஜா ஹெக்டே நடனம் ஆடி இருப்பதாக கூறப்பட்டது. தற்போது அதனை பட குழுவும் உறுதி செய்திருக்கிறது. இது தொடர்பான போஸ்டர் ஒன்றை ரிலீஸ் செய்து நாளை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.





