- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் சூர்யா படங்களை அடுத்து ராகவா லாரன்ஸ் படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே - ஆனா…...

விஜய் சூர்யா படங்களை அடுத்து ராகவா லாரன்ஸ் படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே – ஆனா… இந்த கேரக்டர்ல நடிக்கிறாரே?

- Advertisement -

மும்பையை சேர்ந்தவர் நடிகை பூஜா ஹெக்டே இந்தியில் பல படங்களில் நடித்திருந்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். நடிப்பு நடனம் என ரசிகர்களை அசத்திய பூஜா ஹெக்டே இப்போது 2வது முறையாக எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவர உள்ள ரெட்ரோ படத்திலும் கதாநாயகி பூஜா ஹெக்டே தான். இந்த படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியான நிலையில், இந்த படத்தில் அவர் வாய் பேசாத கேரக்டரில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குளக்கரை பகுதியில் சூர்யா பேசும் காட்சியில் அவர் பதில் பேசாமல் மௌனமாக இருக்கிறார்.

- Advertisement -

இப்போது வந்த லேட்டஸ்ட் தகவலின்படி பூஜா ஹெக்டே இப்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் காஞ்சனா 4 படத்திலும் நடிக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே காஞ்சனா சீரியலில் 3 பாகங்களாக பேய் படங்களை தொடர்ச்சியாக தந்த ராகவா லாரன்ஸ் 4வது படத்தையும் படு திகில் காட்சிகளுடன் உருவாக்கி வருகிறார்.

காஞ்சனா 4 படத்தின் ப்ரீ புரடக்சன்ஸ் பணிகள் முடிவடைந்த நிலையில், படம் ஷூட்டிங் விரைவில் துவங்க இருக்கிறது. இந்த படத்தை கோல்ட் மைன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. காஞ்சனா 4 படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. அதனால் பான் இந்தியா படமாக தான் இந்த படமும் உருவாகும் என்று தெரிய வருகிறது.

- Advertisement -

பெரும்பாலும் ராகவா லாரன்ஸ் இயக்கும் படங்களில் கதாநாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம், அவர்கள் நடிப்பதற்கான காட்சிகளும் மிக அதிகமாக இருக்கும். இயக்குனர் சுந்தர் சி இயக்கும் பேய் படங்களிலும் இதே கான்செப்ட்டை காண முடியும். இது பெண்களை அதிகமாக கவரும் ஒரு யுக்தியாக இரண்டு இயக்குனர்களுமே கவனமாக பின்பற்றுகின்றனர்.

இந்த சூழலில் காஞ்சனா 4 படத்தில் நாயகியாக நடிக்கும் பூஜா ஹெக்டே தான் படத்தில் பேய் கேரக்டரில் நடிக்க உள்ளார். படத்தில் மற்ற கேரக்டர்களை காட்டிலும் பூஜா ஹெக்டே கேரக்டருக்குதான் அதிக முக்கியத்துவம் இருப்பதாக கூறப்படுகிறது. வழக்கமாக ராகவா லாரன்ஸ் பேய் கேரக்டரில் நடித்து வந்த நிலையில், காஞ்சனா 4 படத்தில் அந்த பொறுப்பை பூஜா ஹெக்டேவுக்கு கொடுத்து விட்டதாக தெரிய வருகிறது.

- Advertisement -

சற்று முன்