- Advertisement -
நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் விஜய், அய்யோ வந்துட்டாரே இனி கலாய்ப்பாரே என்று நக்கலாக பேசியிருந்தார். இது விஜய் டிவியில் காமெடி நடிகர் ராமர் செய்த ஒரு காமெடி நிகழ்ச்சி என்றும் அதை அப்படியே ராமரும் வெளியிட்டு உறுதிப்படுத்தி இருந்தார். இராவணன் மகன்டா என்று பாடிய விஜய், கடைசியில் ராமர் டயலாக் பேசி நடிக்கிறாரே என நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் கிண்டலடித்தனர். இந்த நிலையில் ஒரு போக்குவரத்தான ரோட்டில் உள்ள சுவரில், எங்களின் வருங்கால முதல்வரே என ராமர் முதல்வர் கெட்டப்பில் உள்ள போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. யார் பார்த்த வேலை இது என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒருவேளை இது ஏஐ படமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.





