தமிழ் சினிமாவில், சில ஸ்டார் நடிகர்களின் இப்போதைய சம்பளம், 100 கோடிகளை கடந்து விட்டது. காமெடி நடிகர்களான வடிவேலு, சூரி, யோகிபாபு, சந்தானம் போன்றவர்களே, இப்போது கோடிகளில் தான் சம்பளம் வாங்குகின்றனர். ஆனால், அந்த காலத்தில் நடித்த ஹீரோ நடிகர்களின் சம்பளம் சில ஆயிரங்களாக மட்டுமே இருந்தது. பின்னர் படிப்படியாக பல ஆண்டுகளுக்கு பிறகு, சில லட்சங்களாக மாறியது என்பதுதான் உண்மை.
அப்படி நடித்த நடிகர்களில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஒருவர். ஆனால், 1980ம் ஆண்டுக்கு பிறகு, அவர் சம்பளத்தை நிர்ணயிக்கவில்லை. தயாரிப்பாளர் விரும்பும் சம்பளத்தை தந்தால் போதும் என்று கூறிவிட்டார். ஒன்ஸ்மோர் படத்தில் விஜய் உடன் சிவாஜி நடித்த போது, படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஏ சந்திரசேகர் 100 ரூபாய் மட்டுமே அட்வான்ஸ்சாக சிவாஜிக்கு தந்திருக்கிறார். பின், ரூ. 10 லட்சம் சம்பளமாக கொடுத்திருக்கிறார்.
அதே போல், தேவர் மகன் படத்தில் நடித்ததற்காக, சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ. 20 லட்சம். இந்த படங்களை தொடர்ந்து, ரஜினியுடன் படையப்பா படத்தில் சிவாஜி கணேசன் நடித்தார். இந்த படத்தில் நடித்ததற்காக, தயாரிப்பாளர் தரப்பில் இருந்து சம்பளமாக ரூ. ஒரு கோடி என குறிப்பிட்டு, சிவாஜி கணேசனுக்கு செக் வழங்கப்பட்டுள்ளது.
செக்கை சரியாக பார்க்காமல், மகன் ராம்குமாரிடம் செக்கை கொடுத்து, வங்கியில் செலுத்துமாறு கூறி இருக்கிறார். அப்போது, செக்கில் இருந்த தொகையை பார்த்த ராம்குமார், ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்பதை கூறியிருக்கிறார்.
அதுவரை, எந்த படத்துக்கும் ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெறாத சிவாஜி கணேசன், ரூ. 10 லட்சம் என்பதற்கு, தவறுதலாக ஒரு ஜீரோ போட்டு, ஒரு கோடி ரூபாய் என தவறுதலாக செக் அனுப்பி இருப்பார்களோ, என சந்தேகப்பட்டு, தயாரிப்பாளருக்கு போன் போடச் சொல்லி இருக்கிறார். ஆனால், அங்கிருந்து வந்த பதிலில், ஒரு கோடி ரூபாய்தான் உங்களது சம்பளம். உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்குமாறு, ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார் என கூறியிருக்கின்றனர்.
உடனடியாக ரஜினிக்கு, சிவாஜி தரப்பில் இருந்து, நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். அந்த காலத்திலேயே 100 கோடி ரூபாய் சம்பளம் பெறும் அளவுக்கு, நடிப்பின் உச்சத்தில் இருந்த சிவாஜி கணேசன் ‘படையப்பா’ படத்திற்காக மட்டுமே ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்றிருக்கிறார். ஆனால், இன்று பாடல் காட்சிகளில் நடிக்கும் நடிகைகளே பல கோடிகளை சம்பளமாக பெறுகின்றனர்,





