- Advertisement -
Homeபொழுதுபோக்குஆதி புருஸ் தாக்கத்தால் அரண்டு போன திரையுலகம்... சலார் படத்துக்கு வந்த துயரம்... சோகத்தில் மூழ்கிய...

ஆதி புருஸ் தாக்கத்தால் அரண்டு போன திரையுலகம்… சலார் படத்துக்கு வந்த துயரம்… சோகத்தில் மூழ்கிய பிரபாஸ் ரசிகர்கள்…

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் ஏராளமான நட்சத்திரங்கள் இருந்தாலும், அதில் மிக முக்கியமான நடிகராக அறியப்படுபவர் பிரபாஸ். 2002 ஆம் ஆண்டு திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான அவர், தொடர்ந்து பல்வேறு கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இதில், சத்ரபதி, பில்லா, மிஸ்டர் பெர்ஃபெக்ட் போன்ற திரைப்படங்கள் அவருக்கு பெயர் சொல்லும் விதமாய் அமைந்தன.

பிரபாஸ் திரையுலக வாழ்க்கையையே திருப்பி போட்ட திரைப்படம் என்னவென்றால் அது நிச்சயம் பாகுபலிதான். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தெலுங்கு திரையுலகம் மட்டும் இல்லாமல், தமிழ், கன்னடா, மலையாளம், ஹிந்தி உலகிலும் பாகுபலி பெரிய அளவில் பேசப்பட்டது.

- Advertisement -

இன்றைய தேதி வரைக்கும், இந்திய சினிமாவில் மிகப்பெரிய அளவில் வசூலை ஈட்டிய திரைப்படம் எதுவென்றால் அது பாகுபலி தான். அந்த அளவிற்கு படம் ரீச் ஆனதால், பான் இந்தியா கதாநாயகர்களில் ஒருவராக உருவெடுத்தார் பிரபாஸ். இந்த திரைப்படத்தின் மூலம் பிரபாஸின் அந்தஸ்து மிகப்பெரிய அளவில் உயர, இப்போது அதையையே நடிகர் பாழ்படுத்தி வருகிறார்.

பாகுபலி வெளியீட்டுக்கு பின்னர், பிரம்மாண்ட திரைப்படங்களில் மட்டும் நடிப்பது என்று பிரபாஸ் முடிவு செய்துவிட்டார். அதன் தாக்கத்தில், வெளியான சாஹோ திரைப்படம் படுதோல்வியை கண்டது. ஆக்சன் காட்சிகள் பரபரக்க படம் எடுக்கப்பட்டாலும் அது ரசிகர்கள் மனதில் ஒட்டாததால் வந்த இடம் தெரியாமல் மறைந்து போனது.

- Advertisement -

அடுத்ததாக மிகப்பெரிய பொருட்செலவில் ராதே ஷியாம் படம் எடுக்கப்பட்டு திரையரங்குகளில் ரிலீசாகி, ரசிகர்களின் பொறுமையை சோதித்தது. வெறும் காதல் திரைப்படத்திற்கு இத்தனை கோடி ரூபாய் செலவு செய்து படம் உருப்படாமல் போனதாக ரசிகர்கள் ஆத்திரத்துடன் கூறினர். பின்னர் 600 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு வெளியான ஆதி புரூஸ் திரைப்படமும், சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாக பிரபாஸை பலரும் வறுத்தெடுக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் தற்போது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் பிரபாஸ் நடித்திருக்கிறார். இந்த படம் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தடுத்து ஹாட்ரிக் தோல்வியை கொடுத்ததால், படத்தின் டிஜிட்டல் உரிமம் இன்னும் விலை போகவில்லையாம். எதிர்பார்த்த தொகைக்கு படம் போகாததால், சலார் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிரபாஸ் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்