- Advertisement -
Homeபொழுதுபோக்கு650 கோடி ரூபாய் செலவு..ஆதிபுருஷ் இறுதி வசூல் என்ன தெரியுமா? அதுவும் தமிழ் நாட்டில் இவ்வளவு...

650 கோடி ரூபாய் செலவு..ஆதிபுருஷ் இறுதி வசூல் என்ன தெரியுமா? அதுவும் தமிழ் நாட்டில் இவ்வளவு குறைவா?

- Advertisement -

கடந்த ஜூன் மாதம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்து ரசிகர்களிடம் சம அடி வாங்கிய திரைப்படம் என்றால் அது ஆதிபுருஷ் தான் சமீப காலமாக மதத்தை வைத்து திரைப்படம் எடுத்து அதன் மூலம் வருமானத்தை பெருக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால் அதற்கு ஒட்டுமொத்தமாக முடிவுரை எழுதிய படம் என்றால் அது ஆதிபுருஷ் தான். ராமாயணத்தை மையமாக வைத்து எடுத்தால் மக்கள் அனைவரும் பார்ப்பார்கள் என கணக்கு போட்டார்கள். ஆனால் ஏன் டா அந்த கதையை எடுத்தோம் என்ற அளவிற்கு ரசிகர்கள் அதனை திருப்பி அடித்து விட்டார்கள்.

மேலும் இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தும் விதமாக வசனத்தை வைத்திருப்பதாகவும் புகார் இருந்ததால் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் எங்களை மன்னிச்சிடுங்க டா சாமி என்று ஆதிபுருஷ் படக் குழுவினர் வெளிப்படையாகவே மன்னிப்பு கேட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டு வெளியான படத்திலேயே மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்த திரைப்படம் என்றால் அது ஆதிபுருஷ் தான்.

- Advertisement -

சுமார் 650 கோடி ரூபாய் செலவில் இந்த படம் எடுக்கப்பட்டது. ஆனால் இதன் வசூல் பாதியை கூட தாண்டவில்லை. இப்போது மாநில வாரியாக ஆதிபுருஷ் திரைப்படம் எவ்வளவு வசூல் படைத்து இருக்கிறது என்று தற்போது பார்க்கலாம். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஆதிபுருஷ் திரைப்படம் 131 கோடி ரூபாய் வசூலை படைத்திருக்கிறது.

கர்நாடகாவில் 19 கோடியே 40 லட்சம் ரூபாய் வசூலை ஆதிபுரூஷ் பெற்று இருக்கிறது. தமிழகத்தில் வெறும் ஆறு கோடி ரூபாய் தான் ஆதிபுருஷ் வசூல் செய்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக கேரளாவில் மிகவும் குறைந்த பட்சமாக 2 கோடி ரூபாய் அளவிற்கு ஆதிபுரூஷ் வசூல் செய்துள்ளது. இந்தி மாநிலங்களில் அதிகபட்சமாக 147 கோடி ரூபாய் ஆதிபுரூஷ் வசூல் செய்திருக்கிறது. இது தவிர உலகம் முழுவதும் வெளிநாடுகளில் ஆதிபுருஷ் திரைப்படம் 48 கோடியே 75 லட்சம் ரூபாய்தான் வசூல் செய்திருக்கிறது.

- Advertisement -

இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 355 கோடியே 50 லட்சம் ரூபாயை ஆதிபுருஷ் திரைப்படம் வசூல் செய்துள்ளது. மேலும் தற்போது ஆதிபுருஷ் திரைப்படம் தொடர்பாக வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதன் ஓடிடி உரிமமும் விற்பதில் தடை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்