- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு வழியாக வெளியானது பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டீசர்... கிராபிக்ஸ் ரகத்தில் உருவாகி இருக்கும்...

ஒரு வழியாக வெளியானது பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டீசர்… கிராபிக்ஸ் ரகத்தில் உருவாகி இருக்கும் முன்னோட்டம் எப்படி… வாங்க பார்க்கலாம்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது மோஸ்ட் வான்டட் ஹீரோவாக மாறி இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இத்தனைக்கும் அவர் மூன்றே மூன்று திரைப்படங்களை தான் இதுவரை கொடுத்திருக்கிறார். அதில் ஒன்று அவர் முழுக்க முழுக்க இயக்குனராக எடுத்த கோமாளி திரைப்படம். ரவி மோகன் கதாநாயகனாக நடித்திருந்த அந்த திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது.

இரண்டாவதாக அவரே இயக்கி ஹீரோவாகவும் நடித்த லவ் டுடே திரைப்படம். நவீன உலகில் இளைஞர்களின் மத்தியில் செல்போன் பயன்பாடு எப்படி இருக்கிறது, அதனை காதலர்கள் தங்களுக்குள் மாற்றிக் கொள்ளும்போது என்னென்ன விளைவுகள் எல்லாம் ஏற்படுகிறது என்பதை நகைச்சுவை கலந்து கூறியிருந்தார் பிரதீப் ரங்கநாதன். காதல் கலந்த காமெடி திரைப்படமாக எடுக்கப்பட்ட இது ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது.

- Advertisement -

மூன்றாவதாக அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த டிராகன் திரைப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டது. இன்றைய இளைஞர்களுக்கு படிப்பு தான் முக்கியம் என்பதை, வித்தியாசமான திரைக்கதை மூலம் சூப்பராக கூறியிருந்தார் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து. இந்த மூன்று திரைப்படங்களுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்திருக்கின்றன.

இதன் காரணமாக பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் வேல்யூ பெரிய அளவில் உயர்ந்து இருக்கிறது. லவ் டுடே படத்தை முடித்த கையோடு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார் பிரதீப் ரங்கநாதன். ஆனால் படத்தின் பட்ஜெட் நினைத்ததை விட எகிறியதால் அதன் சூட்டிங் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு பின்னர் தள்ளிப் போயின.

- Advertisement -

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் லலித் குமார் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை கடந்து இதன் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இருக்கின்றன. கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி, முக்கிய கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா நடித்திருக்கின்றனர். பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக வருகிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இப்படியான சூழலில் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

அதில் 2040 ஆம் ஆண்டு நடைபெறும் கதை போன்று எடுக்கப்பட்டிருக்கிறது. அறிவியல் தொழில்நுட்பத்தில் கண்ட பெரும் வளர்ச்சியை காட்டி இருப்பதோடு, அப்போது காதலும் எப்படி இருக்கும் என்பதை இந்த திரைப்படம் உணர்த்துவது டீசரிலேயே தெரிகிறது. இதற்கான சிஜி பணிகளில் படக்குழு பெரிய அளவில் மெனக்கெட்டு இருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

- Advertisement -

சற்று முன்