- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் 69 படத்தில் அடுத்தடுத்து இணையும் பிரபலங்கள், அட எல்லாமே மாஸ் நட்சத்திரங்களாக இருக்காங்க, ஆரம்பமே...

விஜய் 69 படத்தில் அடுத்தடுத்து இணையும் பிரபலங்கள், அட எல்லாமே மாஸ் நட்சத்திரங்களாக இருக்காங்க, ஆரம்பமே அசத்தறாங்களே… – ஆச்சரியத்தில் தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படம் விஜய் 69. இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை பையனூரில் துவங்குகிறது. முன்னதாக இன்று பட பூஜையும் நடக்கிறது. நாளை பையனூரில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது. விஜய் 69 படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக, ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் தனது இரண்டு தினங்களாக விஜய் 69 படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்புகளை படத்தை தயாரிக்கும் கே வி என் புரடக்சன்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. முதலில் இந்த படத்தின் வில்லன் கேரக்டரில் நடிக்க உள்ள பாலிவுட் நடிகர் பாபி தியோல் புகைப்படத்துடன் அறிவிப்பு வெளியானது.

- Advertisement -

அதைத் தொடர்ந்து பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜூ ஆகியோரின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அவர்கள் இருவரும் விஜய் 69 படத்தில் நடிப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று காலை இயக்குனர் மற்றும் நடிகர் கௌதம் மேனனின் போஸ்டரை வெளியிட்டு இந்த படத்தில் கௌதம் மேனன் முக்கிய கேரக்டரில் நடிப்பது உறுதியானது. இவர், லியோ படத்திலும் விஜயுடன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து தற்போது மற்றொரு முக்கிய நட்சத்தி நடிகையான பிரியாமணி குறித்து போஸ்டருடன் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விஜய் 69 படத்தில் நடிகை பிரியாமணி நடிப்பதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரியாமணி பல ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

- Advertisement -

சமீபமாக இந்தியிலும் நடித்துவரும் பிரியாமணி தற்போது பான் இந்தியா நட்சத்திரமாக மாறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஷாருக்கான், நயன்தாரா நடித்த அட்லி இயக்கிய ஜவான் படத்தில் பிரியாமணி நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஆண்டில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. தற்போது விஜய் 69 படத்தில் பிரியாமணி நடிப்பது உறுதி செய்யப்பட்டது.

அதேபோல் விஜய் 69 படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பதும் தற்போது உறுதியாகி உள்ளது. அவரது போஸ்டரையும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பாபி தியோல் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதால், பிரகாஷ் ராஜ் கேரக்டர் ரோலில் நடிக்கலாம் என்று தெரிகிறது. விஜய், பிரகாஷ் ராஜ் கூட்டணி கில்லி, சிவகாசி போன்ற படங்களில் பெரிய வெற்றியை தந்தது. இப்படி தொடர்ந்து மாஸ் நட்சத்திரங்கள் விஜய் 69 படத்தில் நடிப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் பலத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்