- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சங்க கடனை அடைக்க வெளிநாடுகள் போய் நட்சத்திர கலை இரவு நடத்தணுமா? இப்படி ஒரு...

நடிகர் சங்க கடனை அடைக்க வெளிநாடுகள் போய் நட்சத்திர கலை இரவு நடத்தணுமா? இப்படி ஒரு சுலபமான வழியை பத்தி நடிகர்கள் யாருமே யோசிக்கலையா?

- Advertisement -

தமிழ் சினிமா கலைஞர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இப்போது சங்கத்தின் தலைவராக நாசர், செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணை தலைவர்களாக பூச்சி முருகன், கருணாஸ் செயல்பட்டு வருகின்றனர். நடிகர் சங்கத்துக்கு என சொந்தமாக கட்டிடம் கட்ட பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டுமான பணி துவங்கப்பட்டது. ஆனால் கட்டுமான பணி பாதியில் நின்ற நிலையில் மீண்டும் பணி துவங்கவில்லை.

இதற்காக நடிகர்கள் ஒவ்வொருவரும் முன்வைப்பு நிதியாக ஒரு கோடி தர வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், பல நடிகர்கள் ஒரு கோடி ரூபாய் கொடுத்தனர். ஆனால் அப்போதும் சங்கத்தின் கட்டிட கட்டுமான பணிகள் துவங்கப்படவில்லை. இந்த சூழலில் நேற்று நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் தலைவர் நாசர் பொதுச் செயலாளர் விஷால் பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகளும் பல நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவின்படி நடிகர் சங்கத்துக்கு உள்ள கடனை அடைக்கவும், நடிகர் சங்கத்தின் கட்டிட கட்டுமான பணியை கட்டி முடிக்கவும் துபாய் மலேசியா சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் நட்சத்திர இரவு கலை நிகழ்ச்சி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இது குறித்து ஏற்கனவே நடிகர் சங்க நிர்வாகிகள் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை நேரில் சந்தித்து பேசிய நிலையில், அவர்களும் இந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இன்னும் சில மாதங்களில் வெளிநாடுகளில் நட்சத்திர இரவு கலை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் கிடைக்கும் பல கோடி ரூபாய் வருமானத்தைக் கொண்டு நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமான பணி மற்றும் நடிகர் சங்க கடனை அடைப்பது என முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே 23 ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த போது எடுத்த நடவடிக்கையை தான் மீண்டும் இப்போதுள்ள சங்க நிர்வாகிகள் எடுத்துள்ளனர்.

ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் பல படங்கள் 500 கோடி 600 கோடி ரூபாய் வசூல் செய்கின்றன. பான் இந்தியா படமாக பெரிய அளவில் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்று ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்கின்றன. அதனால் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து, முன்னணி நடிகர்கள் நடித்து பிரபல இசையமைப்பாளர் இசையமைப்பில் ஒரு படத்தை உருவாக்கி வெளியிட்டால் அது பல நூறு கோடி ரூபாய் வசூலிக்கும்.

படத்துக்கான மொத்த பட்ஜெட்டும் ஒதுக்கி விட்டால், நிச்சயமாக 200 கோடி முதல் 300 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும். அதன்மூலம் நடிகர் சங்க கடனையும் நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமான பணியையும் வெகு எளிதாக முடித்து விடலாம். ஆனால் அதைச் செய்யாமல் மீண்டும் வெளிநாடுகளில் போய் கலை இரவு நடத்தி ரசிகர்களிடம் பணம் வசூலிப்பதையே தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் ஆர்வம் காட்டுகிறது.

சற்று முன்