- Advertisement -
Homeபொழுதுபோக்குபோஸ்டர் போட்டே வாழ்த்து சொல்லிட்டு இருந்த படக்குழு முதல் முறையாக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு...

போஸ்டர் போட்டே வாழ்த்து சொல்லிட்டு இருந்த படக்குழு முதல் முறையாக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கு… நீண்ட நாட்களுக்குப் பிறகு டாப் ஸ்டார் ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் விருது…

- Advertisement -

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர் நடிகர் பிரசாந்த். சாக்லேட் பாய் எனக் கொண்டாடப்பட்ட அவர், தொடர்ந்து ஹிட் படங்களையே ரசிகர்களுக்கு விருந்தாக அளித்து வந்தார். குறிப்பாக 1995 ஆம் ஆண்டுக்கு மேல் அவருக்கு வெளியான திரைப்படங்கள் அத்தனையும் சிறப்பாக அமைந்தன.

 

ஆணழகன் திரைப்படத்தில் தொடங்கி அடுத்தடுத்து ஹிட் திரைப்படங்களை அவர் கொடுக்க, அதில் பொன் மகுடமாய் அமைந்தது ஜீன்ஸ் திரைப்படம். உலக அழகி ஐஸ்வர்யா ராய் உடன் ஜோடி சேர்ந்த பிரசாந்த், அவருடன் டூயட் பாடி ரசிகர்களை கவர்ந்தார். இரட்டை சகோதரர்களை பற்றி எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

 

இன்று அஜித் விஜய் இருவரும் உச்ச நட்சத்திரமாக இருக்க, அப்போதே அந்த இடத்திற்கு பிரசாந்த் வருவார் என்று பலரும் ஆருடம் கூறி வந்தனர். ஆனால் இது எல்லாம் கனவாகவே கலைந்து போனது தான் இன்று சோகம். தனது திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரசாந்த், அந்த அளவு ஜொலிக்காமல் போய்விட்டார்.

 

குறிப்பாக 2005 ஆம் ஆண்டுக்கு பிறகு பிரசாந்த் நடித்த அத்தனை திரைப்படங்களும் படு தோல்வியை சந்தித்தன. ஜெய், ஆயுதம், லண்டன், ஷாக், ஜாம்பவான், தகப்பன்சாமி, அடைக்கலம் என அவர் நடித்த அத்தனை திரைப்படங்களும் வந்து சுவடு தெரியாமல் மறைந்து போயின. இதனால் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார் பிரசாந்த்.

 

பிறகு 2011 ஆம் ஆண்டும் அவர் களத்தில் இறங்க, அதுவும் சோகமாக தான் அமைந்தது. பொன்னர் சங்கர், மம்பட்டியான், சாகசம், ஜானி என அத்தனை திரைப்படங்களும் வந்தது கூட பலருக்கும் தெரியவில்லை. இந்த சமயத்தில்தான் அந்தகன் திரைப்படத்தில் அப்பாயின்மென்ட் ஆனார் பிரசாந்த். ஹிந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்தாதூன் திரைப்படத்தின் ரீமேக்காக இது எடுக்கப்பட்டுள்ளது.

 

சில மாதங்களுக்கு முன்பே தயாரான இந்த திரைப்படத்தில் சிம்ரன், ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தின் போஸ்டர் இணையதளத்தில் பிரபலம் என்று கூறலாம். ஒவ்வொரு பண்டிகை வந்துவிட, அதற்கு முதல் வாழ்த்துக்களை இந்த படக்குழு தான் தெரிவிக்கும். ஒரு சமயத்தில் இதனை ட்ரோல் மெட்டீரியலாக பலரும் மாற்றினர். ஆனால் இதனை படக்குழு கண்டு கொள்ளவே இல்லை. இந்த நிலையில், அந்தகன் படத்தில் இருந்து முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதம் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்