- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்தகன் படத்துக்கு கிடைத்த அமோக வெற்றி, ரசிகர்கள் தந்த பலத்த ஆதரவு, நடிகர் பிரசாந்த் எடுத்த...

அந்தகன் படத்துக்கு கிடைத்த அமோக வெற்றி, ரசிகர்கள் தந்த பலத்த ஆதரவு, நடிகர் பிரசாந்த் எடுத்த அதிரடி முடிவு – அவரது ஆசை நிறைவேறுமா?

- Advertisement -

கடந்த 1990களில் வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரசாந்த். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். கண்ணெதிரே தோன்றினாள், ஜீன்ஸ், திருடா திருடா, ஜோடி, வண்ண வண்ண பூக்கள் என பல வெற்றிப் படங்களை கொடுத்த பிரசாந்த், ரீ என்ட்ரி கொடுத்துள்ள படம் தான் அந்தகன்.

இந்தியில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம்தான் அந்தாதூன். இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கிய பிரசாந்த் அப்பா தியாகராஜன், அவரே மகனை வைத்து இயக்கிய படம் அந்தகன். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது.

- Advertisement -

திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றம் காரணமாக, தமிழ் சினிமாவில் போதிய ஆர்வம் இல்லாமல், பல ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த பிரசாந்த், மிீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த படம் அந்தகன். பல ஆண்டுகளுக்கு பின் பிரசாந்த் நடித்த இந்த படத்தில், கதைக்கு முக்கியத்துவம் தந்து இயக்கி இருந்தார் அவரது அப்பா தியாகராஜன்.

இந்த படத்தில் பியானோ கலைஞராக, கண் பார்வையற்றவராக நடித்திருந்தார். பிரசாந்துடன் பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், கேஎஸ் ரவிக்குமார், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகிபாபு, வனிதா விஜயகுமார் உள்ளிட்டோரும் அந்தகன் படத்தில் நடித்திருந்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் படம் தரமாக இருந்ததால் பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.

- Advertisement -

இப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் அடுத்த ரவுண்டு வர பிரசாந்த் முடிவு செய்துவிட்டார். இந்த நேரத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்திலும் நடிகர் பிரசாந்த் நடித்துள்ளதால், அந்த படத்தின் டிரெய்லர் காட்சிகளும் வெளியாகி, பிரசாந்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனமும், ஈர்ப்பும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடிகர் பிரசாந்த் நேர்காணல் ஒன்றில் பேசுகையில், இனிமேல் சினிமாவில் முழு கவனம் செலுத்தப் போகிறேன். ஆண்டுக்கு குறைந்த பட்சம் 4 படங்களில் நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். குறிப்பிட்ட இயக்குனர் என்று இல்லாமல், எல்லா இயக்குனர்களுடனும் பணிசெய்ய விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார். அவரது விருப்பம் நிறைவேற இயக்குனர்கள், ரசிகர்களின் ஆதரவு பழையபடி கிடைப்பதுதான் முக்கியம்.

- Advertisement -

சற்று முன்