இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார். துவக்கத்தில் நடிகர் விஜயின் அப்பா எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்த ஷங்கர் பிறகு ஜெண்டில் மேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அர்ஜூன் மதுபாலா கவுண்டமணி செந்தில் சரண்ராஜ் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மாஸ் ஹிட் ஆனது.
இந்த படத்தில் பிரபுதேவா ராஜூ சுந்தரம் கௌதமி நடனமாடியா சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடல் பெரிய அளவில் வைரலானது. கொள்ளைக்காரனாகவும், அப்பளம் தயாரிக்கும் கிச்சாவாகவும் ஹீரோ கேரக்டரில் அர்ஜூன் அசத்தலான நடிப்பை தந்திருந்தார்.
தொடர்ந்து முதல்வன் அந்நியன் ஐ சிவாஜி எந்திரன் 2.0 நண்பன் ஜீன்ஸ் இந்தியன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஷங்கர் அடுத்து ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி உள்ளார். பான் இந்தியா படமான இதை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார்.
இந்த படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். ராம் சரணுடன் கியாரா அத்வானி அஞ்சலி சமுத்திரக்கனி எஸ்ஜே சூர்யா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஊழல் அரசியல்வாதிகளை எதிர்க்கும் கலெக்டராக இதில் ராம்சரண் நடித்திருக்கிறார். முதல்வர் கேரக்டரில் எஸ்ஜே சூர்யா நடித்திருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் படத்தின் இயக்குனர் ஷங்கர், நடிகர் விஜய் நடித்த நண்பன் படத்தை இயக்கியவர். தயாரிப்பாளர் தில் ராஜூ, விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்தவர். மேலும் ராம் சரணுக்கு மிகவும் பிடித்தமான தமிழ் நடிகர்களில் ஒருவர் விஜய் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால்தான் சென்னையில் இன்று நடக்கும் கேம் சேஞ்சர் பட பிரமோசன் விழாவில் விஜயும் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழலில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக தமிழ்நாட்டு அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் முதல்வர் நாற்காலிக்கு போட்டியிட தயாராகி வருகிறார். அதனால் கேம் சேஞ்சர் படத்தில் விஜய்க்கு ஆதரவான அரசியல் வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் கேம் சேஞ்சர் படத்தில் வரும் அரசியல் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.





