- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயகாந்த் போல வரவேண்டும் என்று நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.. பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

விஜயகாந்த் போல வரவேண்டும் என்று நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.. பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

- Advertisement -

நடிகர் விஜய் சமீபத்தில் மாவட்டந்தோறும் அதிக மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்களை நேரில் அழைத்து அவர்களை பாராட்டி பரிசும் கொடுத்தார். அதே சமயம் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மாலை நேர கல்வி திட்டத்தையும் அறிவித்திருந்தார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் நோக்கத்தில் தான் இது போன்ற நலத்திட்ட உதவிகளை செய்கிறார் என்ற விமர்சனங்கள் பல எழுந்துள்ளன. இந்த நிலையில் இன்று சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டது.

- Advertisement -

அதில் பேசிய தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி குறித்து அவருடைய பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அதேபோல் தமிழகம் நடக்கும் திமுக ஆட்சி குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.

குறிப்பாக முதல்வர் மாவட்டம் தோறும் புகார் பெட்டி வைக்கப்படும் என்று கூறிய திட்டம் என்ன ஆனது? காவேரி நீர் குறித்து எந்த பேச்சு வார்த்தையும் நடத்தப்படவில்லையே போன்ற பலவற்றை கூறினார்.

- Advertisement -

அதேபோல் முதல்வரோடு தான் தொலைபேசியில் பேசியதாக கூறப்பட்டதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் வரவிருக்கும் தேர்தலில் தனித்து போட்டியில்லை என்றும், தங்களது தலைமையில் கூட்டணி இல்லை என்றும், ஏதாவது ஒரு கூட்டணியில் நிச்சயம் தேமுதிக அங்கம் வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதே சமயம் சமீபத்தில் நடிகர் விஜய் மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டியது குறித்து பேசி அவர், அந்த நிகழ்வு நிச்சயம் பாராட்டுக்குரியது. விஜய் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதை விஜய் தான் முடிவு செய்ய வேண்டும்.

விஜயகாந்த் கிட்டதட்ட 40 ஆண்டுகளாக சமூகப்பணி பணியில் இருக்கிறார். அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்திருக்கிறார். சினிமா வேறு அரசியல் வேறு. இனி அவரைப் போன்று யாராவது வர வேண்டும் என்று நினைத்தால் மோசமான விளைவுகள் தான் ஏற்படும் என்று கூறியிருந்தார் பிரேமலதா விஜயகாந்த்.

அதேபோல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின் நேரலையை விஜயகாந்த் நிச்சயம் பார்த்துக் கொண்டிருப்பார் என்றும் விரைவில் கூட்டணி குறித்து ஒரு நல்ல முடிவை அவரே அறிவிப்பார் என்றும் அவர் கூறி இருந்தார்.

- Advertisement -

சற்று முன்