- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட்லி - அல்லு அர்ஜுன் இணையும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பது இந்த நடிகையா... அடேங்கப்பா இவங்க...

அட்லி – அல்லு அர்ஜுன் இணையும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பது இந்த நடிகையா… அடேங்கப்பா இவங்க உலகம் முழுக்க ஃபேமஸ் ஆச்சே…

- Advertisement -

விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று வெற்றி திரைப்படங்களை கொடுத்த அட்லி அடுத்ததாக பாலிவுட் உலகுக்கு நகர்ந்தார். அங்கு, ஷாருக்கானை வைத்து அவர் ஜவான் திரைப்படத்தையும் இயக்கினார். தமிழில் இந்த திரைப்படம் வரவேற்பை பெறவில்லை என்றாலும் இந்தி திரையுலகில் கொண்டாடப்பட்டது.

ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனையையும் படைத்தது. தமிழ் சினிமாவில் இருந்து பயணித்து இந்தி திரையுலகில் ஒருவர் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் ஈட்டி இருக்கிறார் என்ற சாதனையைப் படைத்தார் அட்லி. இதன் பிறகு, அவரது அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகாமலேயே இருந்தது.

- Advertisement -

அவர் அல்லு அர்ஜுனை சந்தித்து ஒரு திரைப்படத்தின் கதையை கூறி இருப்பதாகவும், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் சில காலம் கழித்து திடீரென அந்த ப்ராஜெக்ட் தள்ளி வைக்கப்பட்டதாக சொன்னார்கள். இந்த சமயத்தில் சல்மான் கானை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க முடிவு செய்தார் அட்லி. அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.

இதில் கேமியோ ரோலில் கமல்ஹாசன் நடிப்பதாகவும் பேசப்பட்டது. ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையும் அதோடு நின்று விட்டது. இதனால் அட்லியின் அடுத்த படம் என்னவாயிற்று என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த சூழலில், அவர் மீண்டும் அல்லு அர்ஜுன் உடனே இணைவதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்தனர். தற்போது அந்தக் கதை தான் வளர்ந்து வருகிறது.

- Advertisement -

புஷ்பா இரண்டாம் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, திரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க தயாராகி வருகிறார் அல்லு அர்ஜுன். இதன் பிறகு அவர் அட்லியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் சென்னைக்கு வந்ததாகவும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறனை அவர்கள் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு இரண்டு கதாபாத்திரம் என்றும் பேசிக் கொள்கிறார்கள். இதில் கதாநாயகியாக, பாலிவுட் பிரபலம் பிரியங்கா சோப்ரா நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. தற்போது, அவர் மகேஷ்பாபு ராஜமவுலி கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அல்லு அர்ஜுனுடனும் அவர் ஜோடி சேர இருப்பது, சினிமா வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்