- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்துல, சிவகார்த்திகேயன் ரொம்ப வீக், அது இல்லாம அவரால இருக்கவே முடியாது - ...

அந்த விஷயத்துல, சிவகார்த்திகேயன் ரொம்ப வீக், அது இல்லாம அவரால இருக்கவே முடியாது – பிரியங்கா மோகன் கொடுத்த ஓபன் ஸ்டேட்மெண்ட்

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன், கடந்த சில வாரங்களாக சமூகவலைதளங்களில் முக்கிய பேசு பொருளாக மாறிவிட்டார். அவரை பற்றிய மிக உயர்வான விமர்சனங்களே இருந்த நிலையில், இப்போது அப்படியே அது தலைகீழாக மாறிவிட்டது. எல்லோரும் சிவகார்த்திகேயன் இப்படிப்பட்டவரா என ஆச்சரியம் மட்டுமின்றி, அதிர்ச்சியும் அடைகின்றனர்.

இசையமைப்பாளர் டி.இமான் கொடுத்த ஓபன் ஸ்டேட்மெண்டின் விளைவுதான் இது. மனம்கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, நம்ம வீட்டுப்பிள்ளை படங்களில், சிவகார்த்திகேயனுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த இமான், சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என கூறிய பரபரப்பு இன்னுமே ஓயவே இல்லை.

ஆனால், இந்த விவகாரத்தில் இருந்த விஜய்தான் ஓரளவு சிவகார்த்திகேயனை காப்பாற்றினார் என்றுதான் சொல்ல வேண்டும். லியோ ரிலீஸ் காரணமாக, அந்த விஷயங்களை அப்டேட் ஆக அடிக்கடி கொடுக்க வேண்டி இருந்ததால், சிவகார்த்திகேயனை விட்டுவிட்டனர். இல்லை என்றால், இன்னும் சிவகார்த்திகேயன் நிலைமை மோசமாக போயிருக்கும்.

ஆனால், இவ்வளவு விமர்சனங்கள் வந்தும், பலவிதமான சர்ச்சைகள் எழுந்தும், சிவகார்த்திகேயன் வாயே திறக்காமல் மவுனம் காப்பதுதான் அவரது ரசிகர்களுக்கு பெரிய வேதனையாக இருக்கிறது. அவர் தரப்பில் இருந்து இதற்கான எந்தவிதமான பதிலோ, மறுப்போ தெரிவிக்காத நிலையில் இமான் கூறுவது முற்றிலும் உண்மையோ என சந்தேகிக்கவே அனைவருக்கும் தோன்றுகிறது.

இதற்கிடையே சிவகார்த்திகேயனுடன் டாக்டர் மற்றும் டான் படங்களில் நடித்த நடிகை பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயன் பற்றிய ஒரு தகவலை வெளிப்படையாக கூறி இருக்கிறார். அதாவது, சிவகார்த்திகேயன் மிக தீவிரமான ஸ்வீட் பிரியர். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி ஏதேனும் இனிப்புகளை சாப்பிட்டுக் கொண்டே இருப்பார். அவருக்கு இனிப்பு ரொம்ப பிடிக்கும். இனிப்புக்கு அவர் அடிமையாகி விட்டார். அவர் சாப்பிடுவது மட்டுமின்றி, அங்கிருக்கிற மற்றவர்களுக்கும் கொடுத்து சாப்பிட வற்புறுத்துவார் என்று சமீபத்தில் கூறி இருக்கிறார்.

நல்ல வேளையாக, சிவகார்த்திகேயன் இனிப்பு விஷயத்தில் வீக்னெஸ் ஆக இருப்பதாக அவருடன் 2 படங்களில் நடித்த பிரியங்கா மோகன் கூறி இருக்கிறார். ஆனால், தனது மற்றொரு நெருங்கிய பாய் பிரண்ட் டைரக்டர் நெல்சனுக்கு என்ன பிடிக்கும் என்று பிரியங்கா மோகன் சொல்லவில்லையே என, இணையத்தில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

சற்று முன்