- Advertisement -
ஏஜிஎஸ் எண்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள ஒரு படத்தில் பார்வையற்ற ஒரு மாற்றுத்திறனாளி கேரக்டரில் நடிகை பிரியங்கா மோகன் நடித்து வருகிறார். கதையின் நாயகியை மையப்படுத்திய ஒரு கதைக்களத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்துக்கு முதலில் தி பிளைண்ட் ஐ என்று தலைப்பு கூறப்பட்டது. அதன்பிறகு பெர்ஃப்யூம் என்ற தலைப்பு வைப்பதாக பேசப்பட்டது. இப்போது ரெட் ஐ என்று தலைப்பு வைக்கபட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த 3ல் விரைவில் ஒரு டைட்டிலை படக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





